உங்கள் மனைவியுடன் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இவற்றை விரும்புவாள் என்கிறது. உளவியல்.
==================================================
வரவேற்பரையில் அவளுக்குத் தூக்கம் வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில், அவளை உங்கள் படுக்கையறைக்குத் தூக்கிச் செல்லுங்கள். அதிக அளவில் அவள் ஒரு குழந்தை போல எண்ணச் செய்யுங்கள். உண்மை என்னவெனில், ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனால் இரண்டு வயதுள்ள சிறுமியைப் போன்றே உபசரிக்கப்பட வேண்டும் என்கிறது உளவியல்.
சில வேளை உங்கள் மனைவியர் உங்களிடம் சிறுபிள்ளைத் தனமாகவும், செல்லமாகவும் நடந்து கொள்கிறாள். அவர்களை அன்புடன் அரவணையுங்கள். வேறு யாரிடம் அவள் அவற்றை எதிர்பார்க்க முடியும் என்பதை சிந்தியுங்கள்.
நீங்கள் உமது மனைவியுடன் கருத்து முரண்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அடுத்து அவள் செயற்பாடு என்னவாக இருக்கும். அநேக பெண்கள் அவரது பைகளைத் தூக்கித் தாய் வீடு செல்லத் துணிவர். அதன் அர்த்தம் அவள் விவாகரத்து கேட்டு நிற்பதல்ல. அதுவே அவளது சிறு பிள்ளைத் தனம் என்பதை உணருங்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம், அவளைப் பற்றிப் பிடித்து, அவள் கண்களை நோக்கி "உன்னை திட்டியதற்கு என்னை மன்னித்து விடு" எனக் கூறுங்கள். அவள் மீது பத்து மடங்கு அன்பைப் பொழிந்தால், அவள் இருபது மடங்கு அன்பைக் காட்டுவாள். அது தான் பெண்மை.
அப்பெண் உங்களுக்காகவே படைக்கப்பட்டவள். ஒவ்வொரு சகோதரரும் திருமணம் செய்து கொள்ள முன், பெண்களின் உளவியல் பற்றி கட்டாயம் கற்க வேண்டும். பெண்கள் பற்றிய நூல்களை வாசிக்க வேண்டும். . இல்லாவிட்டால் அவர்களுடனான வாழ்வில் கடின பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
திருமணம், முறையான வாழ்க்கை முறை, பிள்ளை வளர்ப்பு, திருமணச் சட்டங்கள் என்பன பற்றிய அறிவின்றி வெறுமனே திருமணத்தில் குதிக்க வேண்டாம்.
, உங்கள் துணை கோபமாக இருந்தால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒருவர் நெருப்பாக இருக்கும் பட்சத்தில், அடுத்தவர் நீராகவே இருக்க வேண்டும்.
உங்கள் மனைவியுடன் ஒளிந்து பிடித்து விளையாடுங்கள்
வீட்டிலோ, தோட்டத்திலோ அவளுக்காக கவிதை, பாடல் படியுங்கள், வீட்டில் அவளுக்கு ஒத்தாசையாக இருங்கள், எப்போதும் அவளுக்குக் கட்டளையிடும் எஜமானாகவே இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள், மனைவியுடன் ஒன்றாகக் குளியுங்கள். வசதியிருப்பின் அவளுடன் நீச்சல் குளத்தில் சேர்ந்து நீந்தக் கூடச் செய்யுங்கள்,
முடியுமான வேளையில் ஒன்றாக சமையுங்கள், அவளுக்கு சமைக்கத் தெரியாவிடின், நீங்கள் அறிந்தவற்றை அவளுக்குக் கற்றுத் தாருங்கள். அவளது அறிவின் வளர்ச்சிக்கு துணை நில்லுங்கள், அவளது திறமைகளை மனதாரப் பாராட்டுங்கள். அவளது அன்பு எந்தளவு உங்களுக்கு தேவை என்பதை அவளிடம் கூறுங்கள். உங்களைப் பற்றி அனைத்து விஷயங்களையும் (தொழில், நோய்கள், கடன்கள், பிரச்சினைகள், சந்தோசம், பதவி உயர்வு) அவளிடம் கலந்துரையாடுங்கள். அவள் உங்கள் துணை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவளது குறைகளை உங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்வதை முற்றிலும் தடுத்து கொள்ளுங்கள்,
அவளது கண்களைக் கட்டி விளையாடுங்கள், அவசர வேலையில் ஈடுபட்டுள்ள ஓர் சந்தர்ப்பத்தில் அவளை அழைத்து முத்தமிட்டு அனுப்புங்கள், அடிக்கடி இயன்ற போது குறுந்தகவல் அனுப்பலாம், வேலைக்குச் செல்லும் போது: அவள் பர்ஸ், அலமாரி, அல்லது தலையணைக்குக் கீழ் ஒரு துண்டில் "ஐ லவ் யூ" என்று எழுதி வைத்துச் செல்லலாம், இவை யாவும் ரொமாண்டிக் இன் ஒரு பகுதியே. அவள் இவற்றை தன் கணவனிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ரொமான்ஸ் என்பது படுக்கையில், அந்த ஒரு சில மணித்துளிகளில் மட்டுமே அல்ல. அவள் மீதுள்ள அன்பை உயிருடன் இருக்கும் போதே உணரச் செய்யுங்கள், தெரிவியுங்கள், மகிழ்வியுங்கள். மனப்பூர்வமாக தன் கணவர் தனக்குக் கிடைத்த பெறும் அதிர்ஷ்டம் என்பதை உணரச் செய்ய முடிந்தால், உங்களை விடச் சிறந்த கணவன் யாராக இருக்க முடியும்.
அடுத்து சகோதரிகளே, ரொமான்ஸின் ஒரு பகுதி உங்களுடையது, உங்கள் கணவர் மீதான அன்பை, காதலை வெளிப் படுத்த வெட்கப் பட வேண்டாம்.. அவர் வேலைக்குச் சென்றுள்ள போது இனிய குறுந்தகவல்களைப் பரிமாற்றம் செய்யுங்கள்.
உணவு உண்ணும் போது அவருக்கு ஒரு குழந்தைக்கு உணவளிப்பது போன்று ஊட்டி விடுங்கள், அன்பைப் பரிமாறுங்கள்.
கணவன்-மனைவி ஓர் அற்புத உறவு. வாழும் வாழ்க்கை குறுகியது. சந்தோசமாக வாழுங்கள்.
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணலாம்.
No comments:
Post a Comment