Monday, May 28, 2018

கணவன் மனைவி உறவின் வெளிப்பாடு குட்டிக் கதை . . . .

கணவன் மனைவி உறவின் வெளிப்பாடு
குட்டிக் கதை . . . .
சுவேதாவை பெண்பாரக்கும் படலம் நடந்து கொண்டிருந்தது .
மாப்பிள்ளை பிரதீப் கூறினான் . நான் சுவேதாகிட்ட கொஞ்சம் தனியா பேசனும்னு சொன்னான் .
சுவேதா ,பயந்து கொண்டே வந்தாள் நம்ம காலேஜ் லைஃப் பற்றி கேட்பாரோ ,. .
கணேஷ் பற்றி சொல்லலாமா வேண்டாமா . .. . .
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்களுடன் பிரதீப்பிடம் ,பேச காத்திருந்தாள் . . . .
பிரதீப் வந்ததும் ,எப்படி இருக்கீங்கன்னு கேட்டான் .
ம் என்று ஒற்றை சொல்லில் முடித்துக் கொண்டாள் பயத்தில் .. . .
பிரதீப் சொன்னான் .நான் வெளிப்படையாய் பேசறவன் "உங்க கடந்த காலத்தை பற்றி எனக்கு கவலை இல்லை . அது எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை . அதை பற்றிய கவலை இல்லை .எதிர் காலம் மட்டுமே நம்முடையது என்று யதார்த்தமாக "பேசினான் . சுவேதாவுக்கு அவன் பேசியது பிடித்திருந்தது . . . .
என் மனைவி இப்படித்தான் இருக்கனும்னு எனக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கு என்றான் . . .
என்னன்னு சொல்லுங்க என்றாள் சுவேதா . . . .
நீங்க என்னதான் ஐ டி ல வேலை செய்தாலும் கணவனை மாமா ன்னு சொல்றது தான் எனக்கு பிடிக்கும் . .
சரி அப்புறம் என்றாள் சுவேதா . .
டிரஸ் பண்ற விதம் எனக்கு நைட்டி பிடிக்காது . வீட்ல புடவை தான் கட்டனும் .. .
வெளில போகும் போது சுடிதார் துப்பட்டாவோட போடனும் . . .
இதுக்கு சரின்னா "என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னா . .
வெளில வந்து வழியனுப்புங்க உங்க கண்ணை பார்த்து தெரிந்து கொள்வேன் .என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான் பிரதீப் .
மாப்பிள்ளை வீட்டார் புறப்படும் போது முதலில் வேகவேகமாக வழியனுப்ப வந்தாள் சுவேதா . .
.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் . அப்புறம் என்ன அடுத்து திருமணம் தான் .
மாமா , மாமா சுவேதா கூப்பிட்டாள் .
சொல்லு அம்மு என்றான் பிரதீப் .
ஒன்னும் இல்லை மாமா எனக்கு ஒரு சந்தேகம் . .ஏன் மாமா வீட்ல இருக்கும் போது புடவை "கட்ட சொல்றீங்க வெளில போகும் போது சுடிதார் போட சொல்றீங்க . . .
அதுவா ஒரு நிமிடம் கண்ணை மூடு சொல்றேன் என்றான் பிரதீப் . . .
சுவேதா கண்ணை மூடினாள் .
இப்ப கண்ணை திற என் இரண்டு கைகளிலும் என்ன இருக்கு சொல்லு பார்க்கலாம் என்று இரண்டு கைகளையும் மூடிக்கொண்டிருந்தான் பிரதீப் .
ஒரு கை இறுக்கமாக மூடியிருந்தது . ஒரு கை லேசாக திறந்திருந்தது .சுவேதா லேசாக திறந்திருந்த கையையே பார்த்தாள் ,
ஏன் சுவே இறுக்கமா மூடியிருக்க கையை பார்க்காமா லேசாக திறந்திருக்க கையை பார்க்கற .என்றான் பிரதீப் .
லேசாக திறந்திருக்க கை வழியா பார்த்தா ஏதாவது தெரியுதான்னு பார்க்கத்தான் .. .
;
லேசாக திறந்திருக்கும் கை கவர்ச்சியான ஆடைகள் . . .
இறுக்க மூடியிருக்கும் கை உனக்கே புரியும்னு நினைக்கிறேன் .
சுவேதா எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பார்கள் அதனால் தான் வெளில செல்லும் போது "ஆடைகளில் கவனமாக இரு என்கிறேன் என்றான் பிரதீப் ,. . .
.
பிரதீப் சொன்னது எல்லாருக்கும் "பொருந்தும் தானே . . ..

No comments:

Post a Comment