படித்ததில் எனக்கு பிடித்தது 😍❤️🥰
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது.பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன், பேனாவில் கண்ணீர் ஊற்றி ஒரு கவிதை எழுதினார்.
இதோ அந்தக் கவிதை.
தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
இந்த கண்ணதாசனின் வரிகளில்தான் எத்தனை உண்மை, எத்தனை நேர்மை
❤️🌹இளங்கலை❤️🌹
No comments:
Post a Comment