Tuesday, November 30, 2021

Self Discipline

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
இன்னும் கல்யாணம் ஆகலயா?
குழந்தைகள் இல்லையா?
இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?
ஏன் இன்னும் Car வாங்கவில்லை?
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்.

நன்றி!

#Self #Discipline
#படித்ததில்_பிடித்தது

Monday, November 15, 2021

படித்ததில் பிடித்தது

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

(படித்ததில் பிடித்தது)

வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது

#அப்பா அப்பா

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.

இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.

எனக்கு எதுவும் வேணாம் அய்யா..

உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ? என்று கேட்டாள்.

ஆமா ஏனம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?

உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.

இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பலகத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.

இந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு பெண்.

சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த சிறுமி கேட்க்க..

"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்."

தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.

Friday, November 12, 2021

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே.

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே.
காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்கான பொருளைப் பெற, பல ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார்; பொருள் பெற்றார். ஹைதராபாத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்றார் மாளவியா. 
தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார். அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தார். சபை ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.
மாளவியா அந்தக் காலணியை கையில் எடுத்துக் கொண்டு “மிக்க நன்றி மன்னர் பிரானே” எனக் கூறி, அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வந்தவர், அரண்மனை வாசலில் ஒரு மேடையின் மீது ஏறி நின்று, “பெரியோர்களே, ஹைதராபாத் மாநகரத்துச் சீமான்களே, சீமாட்டிகளே இதோ காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி... ஏலத்திற்கு விடப்
போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம்'' எனச் சத்தமிட்டுக் கூவினார். 
பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து, கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர். இதைப் பார்த்த அரண்மனை அதிகாரி அவசரமாக உள்ளே ஓடி “அரசே உங்கள் காலணி ஏலம் போடப்படுகிறது. கால்பணம், அரைப்பணமாம். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதிமந்திரியை அழைத்தார். “ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள். என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். நிதிமந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது. முடிவில் நிதிமந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச் செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார். சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா அவர்கள் “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக் கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச் சென்றார்.
அன்று அவர் சிறுக சிறுக சேர்த்து கட்டியது தான் பனாரஸ் இந்து பல்கலைகழமாய் மாறியது.
இன்று 20000 மாணவர்கள் தங்கி படிக்கும் ஆசியாவிலேயே பெரிய பல்கலைகழகமாகவும் 32 நாடுகளிலிருந்து வந்து படிக்கும் பெருமைக்கும் உரியது.
திரு. மதன் மோகன் மாளவியா* அவர்கள் மீது... "அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்" 
இந்திய கல்வியாளரும் இந்திய விடுதலை இயக்கத்தில் முதன்மை பங்களித்த விடுதலை வீரரும் ஆவார்.
*அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!*

Thursday, November 4, 2021

எனக்கு என்ன பரிசு தரப்போறீங்க

மகன்; அம்மா எனனோட18வது வயசுல எனக்கு என்ன பரிசு தரப்போறீங்க

அம்மா; அதுக்கு இன்னும் டைம் இருக்கு செல்லம்
மகன் தனது 17வது வயதை அடைந்தான்
ஒரு நாள் அவன் நோய் வாய்ப்பட்டான்
அவனது தாய் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்
மருத்துவர்; உங்கள் மகனுக்கு இதயத்தில் எதோ பிரச்சினை என்றார்

மகன்; நான் சாகப்போகிறேனா அம்மா
அவனது அம்மா அழுதுகொண்டே சொன்னார் உனக்கு எதுவும் நடக்க விட மாட்டேன் செல்லம்
சிரிது காலத்திற்கு பிறகு
அவன் குணமடைந்தான்
அவன் தனது 18வது வயதை அடைந்த்தான்
அவன் தனது அறைக்கு சென்றான்
அங்கே அவனது அறையில் அவனுக்கு ஒரு கடிதம் இருந்தது

அவனது தாய் அவனுக்கு எழுதியது
உனக்கு நியாபகம் இருக்கிறதா செல்லம் நீ என்னிடம் ஒரு முறை கேட்டாய் எனது 18வது வயதில் எனக்கு என்ன பரிசு தர போகிறீர்கள் என்று . நான் உனக்கு கொடுத்த பரிசு என் இதயம் .நீ நலமாக வாழ வேண்டும.மகனே பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆமாம் அவனது தாய் தன் மகனுக்கு தன் இதயத்தை கொடுத்துவிட்டார்
இதை விட சிறந்த பரிசு அவனுக்கு வாழ்க்கையில் கிடைக்காது, அவனது தாயைப்போல.....😊

#copied