Thursday, March 29, 2018

Happy life magic

வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

ஒரு ஊர்ல "கணவர்கள் விற்கப்படும்"  என புதிதாக கடை திறக்கப்பட்டது..

அந்த கடை வாசலில் விதிமுறை போர்டு இருந்தது...

அதில் எழுதியிருந்தது...

1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்...

2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கிறது... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்...

3.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது...
அப்படியே வெளியேதான் போக முடியும்...

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்...

"பச்... கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது"

முதல் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்..."

இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றாங்க...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்..."

இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறாங்க...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் வசீகரமானவர்கள்..."

அந்த இளம்பெண் வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"ன்னு நினைச்சு மேல போக முடிவெடுத்தார்...

நாலாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்..."

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?...

"கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்..." அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும் மேலே போனார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள்...
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்...
மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்...

அவ்ளோ தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியல...

சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே... அங்க என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...

சரி மேல போயி தான் பார்ப்போம்னு மேலே போறாங்க...

ஆறாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை...
வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது...
இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே, உங்களை திருப்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத்தான்...!
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி...!"

அந்த பெண்ணுக்கு லேசாக தலை சுற்றியது...

"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும்..." அப்படின்னு படிகட்டில் போட்டிருந்தது...

இந்த கதை நம் அனைவருக்குமே பொருந்தும்...

அந்த கடையின் உரிமையாளர் தான் இறைவன்...

அந்த கடை தான் இந்த உலகம்...

அந்த இளம்பெண் தான் நாம் அனைவரும்...

வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் ஏதாவது ஒரு வகையில் இருக்க தான் செய்கின்றன...

நாம் தான் வசதிகளை மேம்படுத்த அடுத்த அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டே இருக்கிறோம்.
இவ்வாறு முன்னோக்கி செல்வது தான் வளர்ச்சி...
தவறில்லை...

ஆனால், இப்போது இருக்கும் கட்டத்தில் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்...

அதாவது, எந்த கட்டத்திலும் திருப்தியுடன், மனநிறைவுடன் வாழ வேண்டும்...

அடுத்த கட்டத்திற்கு சென்றால் தான் மனம் திருப்தி அடையும் என்றால், அந்த கட்டத்திற்கு சென்ற பின்னர், இன்னும் மேலே சென்றால் தான் நிறைவடைவதாக மனம் எண்ணும்...

ஆக, கடைசி வரை மனம் நிறைவடையாத நிலை தான் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்குள் வாழ்க்கையும் முடிந்து விடும்...

மனநிறைவுடன் வாழ்ந்தால் எந்த நிலையிலும் சந்தோஷமாக, நிம்மதியாக வாழலாம்...

மனம் நிறைவடையாவிட்டால் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் சந்தோஷமும், நிம்மதியும் இருக்காது...

எனவே, நாம் இருக்கும் நிலைகள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்காது...
மனம் நிறைவடைந்தால் தான், நிம்மதி கிடைக்கும், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்...

"மனநிறைவு" இது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

வாழ்க நலமுடன், வளமுடன்...

No comments:

Post a Comment