Saturday, March 31, 2018

Kanavan Manaivi

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.
வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்

மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

Thursday, March 29, 2018

Ennaval

என்னவள்.. <3

* காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும், இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.

* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!

* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!

* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!

* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.

* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!

* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..

Happy life magic

வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

ஒரு ஊர்ல "கணவர்கள் விற்கப்படும்"  என புதிதாக கடை திறக்கப்பட்டது..

அந்த கடை வாசலில் விதிமுறை போர்டு இருந்தது...

அதில் எழுதியிருந்தது...

1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்...

2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கிறது... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்...

3.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது...
அப்படியே வெளியேதான் போக முடியும்...

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்...

"பச்... கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது"

முதல் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்..."

இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றாங்க...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்..."

இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறாங்க...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் வசீகரமானவர்கள்..."

அந்த இளம்பெண் வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"ன்னு நினைச்சு மேல போக முடிவெடுத்தார்...

நாலாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்..."

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?...

"கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்..." அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும் மேலே போனார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள்...
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்...
மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்...

அவ்ளோ தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியல...

சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே... அங்க என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...

சரி மேல போயி தான் பார்ப்போம்னு மேலே போறாங்க...

ஆறாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை...
வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது...
இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே, உங்களை திருப்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத்தான்...!
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி...!"

அந்த பெண்ணுக்கு லேசாக தலை சுற்றியது...

"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும்..." அப்படின்னு படிகட்டில் போட்டிருந்தது...

இந்த கதை நம் அனைவருக்குமே பொருந்தும்...

அந்த கடையின் உரிமையாளர் தான் இறைவன்...

அந்த கடை தான் இந்த உலகம்...

அந்த இளம்பெண் தான் நாம் அனைவரும்...

வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் ஏதாவது ஒரு வகையில் இருக்க தான் செய்கின்றன...

நாம் தான் வசதிகளை மேம்படுத்த அடுத்த அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டே இருக்கிறோம்.
இவ்வாறு முன்னோக்கி செல்வது தான் வளர்ச்சி...
தவறில்லை...

ஆனால், இப்போது இருக்கும் கட்டத்தில் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்...

அதாவது, எந்த கட்டத்திலும் திருப்தியுடன், மனநிறைவுடன் வாழ வேண்டும்...

அடுத்த கட்டத்திற்கு சென்றால் தான் மனம் திருப்தி அடையும் என்றால், அந்த கட்டத்திற்கு சென்ற பின்னர், இன்னும் மேலே சென்றால் தான் நிறைவடைவதாக மனம் எண்ணும்...

ஆக, கடைசி வரை மனம் நிறைவடையாத நிலை தான் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்குள் வாழ்க்கையும் முடிந்து விடும்...

மனநிறைவுடன் வாழ்ந்தால் எந்த நிலையிலும் சந்தோஷமாக, நிம்மதியாக வாழலாம்...

மனம் நிறைவடையாவிட்டால் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் சந்தோஷமும், நிம்மதியும் இருக்காது...

எனவே, நாம் இருக்கும் நிலைகள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்காது...
மனம் நிறைவடைந்தால் தான், நிம்மதி கிடைக்கும், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்...

"மனநிறைவு" இது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

வாழ்க நலமுடன், வளமுடன்...

Wednesday, March 28, 2018

Peaceful family

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்

4.முதலில் அனைத்து வீட்டுவேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப்படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடுங்கள் ..இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப்போலவே ..

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பனமாதிரியே வந்திருக்கு "

10.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்டீர்களோ ..
உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்

👨🏻‍🌾: 11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்

12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்துகொள்ளுங்கள்

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்

16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை
👨🏻‍🌾: 17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணைப்பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர் ..எண்ணவும் கூடாது

18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி ..இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கைகொள்ள செய்திடும்

20.தேவையில்லாமல் பி ரொக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

21.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

22.அநேகமான நேரங்களில் நயிட்டி அணிவதால் கூடுதலான நயிட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்

24.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள் ..மாலைவேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்கவேண்டாம்

27.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் ..உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும் ..சுத்தத்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்

29.கொடுமையன டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்க்கி கொள்ளுங்கள்

31.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள்

31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

33.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள் ..

34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேக கண் கொண்டு பார்க்காதீர்கள்

35.எல்லா கணவர்களும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்

36.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்கவேண்டாம் ..தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள் ..கொடுத்தபின் புலம்பவேண்டாம்
👨🏻‍🌾: 38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் ..மற்றும் பக்கத்துவீட்டு பெண்கள் அவர்களின்p கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம் ..

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் ..வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே ..

44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..

48.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது ..மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டும்

51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எட்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்துகொள்ளுங்கள் அஃது தேவைஇல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க உதவும்

53.கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்தி அவர் குடிக்க விரும்பினால் ..அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவாருங்கள் அதுவே நல்லது

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் ..ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்
👨🏻‍🌾: 58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்கவேண்டாம்

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை ..உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை ..தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்

65.மொத்தத்தில் நீங்கள் தாயக ..தோழியாக ..மனைவியாக ..பல பல யாக இருப்பதைவிட ..சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்

பயற்சி யாளருக்குப்பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும் ...life எளிமையாகும் ..இனிமையாகும்

அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை
இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.

வாழ்க வளமுடன்...

Tuesday, March 27, 2018

Parisu

இன்று காலை என் வீட்டின் அருகில் ஒரு காட்சி.
ஒரு மூதாட்டி காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியை ஒரு சிறுவன் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்ற சிறுவன் பாட்டி இந்தாங்க இந்த காச வச்சுக்கோங்க என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். அதற்க்கு அந்த பாட்டி காசெல்லாம் வேனா ராசா ஏதாது வாங்கிக்கோனு என்று பதில் சொல்ல அந்த சிறுவன் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தான். சற்று நேரம் கழிந்த பின் பாட்டி எனக்கு ஒரு முத்தம் தா என்று கேட்க்க சற்றும் யோசிக்காமல் அந்த பாட்டி அந்த மழலையின் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார். அந்த சிறுவன் மறுபடியும் அவரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். வேணாம் ராசா ஏதாது வங்கிக்கோனு சொல்ல அந்த சிறுவன் அதான் உனிடம் இருந்து முத்தத்தை வாங்கிவிட்டேனே என்றான். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி அந்த சிறுவனை கட்டி அனைத்து சிறு துளி கண்ணீர் சிந்தினார்.
அந்த சிறுவன் தந்தது முத்தத்திற்கு தந்தபரிசு அல்ல அது அந்த பாட்டி தந்த பாசத்திர்க்கான பரிசு.
- நந்த மீனாள்.
சிந்தனை சிறப்பி.

Monday, March 19, 2018

Mind blowing stories

நான் வேலைக்கு போறேன்..என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா - வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல் !

''நான் வேலைக்கு போறேன்...

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!''

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்... காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

- இது வாட்ஸ்ஆப் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் நெஞ்சைத் தொடும் ஒரு பதிவு.