கணவனை நேசிக்கும் "மனைவிகளுக்கு"...
சில உபதேசங்கள்...
*நீங்கள்தான் உங்கள் வீட்டின் வாசனை! [வாசனை என்றால் மகா ராணி] உங்கள் கணவர் வீட்டிற்கு வந்தவுடன் அவர் பார்க்கும் முதல் முகம் நீங்களாகத்தான் இருக்கவேண்டும்,
*அடிக்கடி உங்கள் கணவரின் முகம் பார்த்து ஒரு சிறு புன்னகையில் வீசிடுங்கள்,
*உங்கள் கணவர் வீட்டிற்குள் வரும் முன் உங்களது வீட்டை சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள்,
*உங்கள் கணவரிடம் எந்த ஒரு இரகசியமும் மறைக்க வேண்டாம், நல்லதோ கெட்டதோ அவர் புரிந்துகொள்ளும் படி தெளிவாக சொல்லிவிடுங்கள்,
*கணவன் ஓய்வெடுக்கும் இடம் (கட்டிலை) எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்,
*கணவர் வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களில் அழகிய தோற்றத்தில் பிரகாசமான முகத்தோடு இருங்கள்,
*உங்களது ஆடை அலங்காரத்தின் மூலம் உங்கள் கணவரின் முகம் சுழிக்கும் படி வைத்துவிடாதீர்கள்,
*வீட்டு பிரச்சினை முதல் நாட்டு பிரச்சினை வரை எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்களுக்குள் ஏற்படும் சில சந்தேகங்களையும் கேட்டு அறியுங்கள்,
*கணவரிடம் பேசும்போது உங்கள் பெற்றோர், அல்லது அவரின் பெற்றோர் அருகில் இருக்கிறார்கள் என்றால் உங்கள் குரலை தாழ்த்திக்கொள்ளுங்கள்,
*உங்கள் பெற்றோர் வீட்டிற்கு நீங்கள் மட்டும் தனியாக செல்லாதீர்கள், ஒருவேளை கணவர் வர இயலவில்லை என்றாலும் விட்டுவிட சொல்லுங்கள்,
*குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சில திட்டம் போட தூண்டுங்கள்,
*குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் முதல், கல்வி வரை உங்கள் கணவருக்கு எல்லாவற்றையும் தெரியப்படுத்துங்கள்,
*உங்கள் குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவருக்காவது பயப்படும்படி வளர்பீர்.
*அப்பாவிடம் மரியாதையாக பேசவேண்டும், நடக்க வேண்டும் என உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்,
*பணத்தின், சேமிப்பின் அருமையை சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு புரிய வைப்பது மிகவும் நல்லது,
*நீங்கள் செய்யாத தவறை "நீதான் செய்தாய்!" என அவர் வாதிடும் போது பதிலுக்கு நீங்களும் வாதிட வேண்டாம், அந்த நேரத்தில் அமைதி காத்திடுங்கள், பிறகு அவரே உங்களிடம் மண்ணிப்பு கேட்பர்,
*கணவன் கோபத்தில் இருக்கும் நேரத்தில் நீங்கள் முடிந்த வரை அமைதி காத்திடுங்கள், ஏனென்றால் கோபத்தில் எவருமே மனிதராக இருப்பதில்லை,
*கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்திடுங்கள், அவர்களுக்கு பொருத்தமான ஆடையை நீங்களே எடுத்து கொடுங்கள்.
*கணவனின் தேவைகளை விளங்கிக்கொள்ளுங்கள், அவரிடம் அழகிய முறையில் பழக உங்கள் நேரத்தில் ஒதுக்கிடுங்கள்,
*கணவர் எப்போதுமே நல்ல மனநிலையில் இருப்பார் என நீங்கள் நினைக்க வேண்டாம், ஏனென்றால் வீட்டில் இருப்பதுபோல எந்த ஆண்களும் வெளியில் இருப்பதில்லை,
*அவர்களின் தொழில் விசயத்தில் உங்களுக்கு தோன்றிய சில யோசனைகளை வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்,
*முடிந்தால் கணவனின் வியாபாரத்திலும் உதவி செய்திடுங்கள்,
*உங்கள் கணவர் பயன்படுத்தும் பொருட்கள் ஒரு குண்டூசியாக கூட இருந்தாலும் அதை தங்கம் போல பாதுகாத்திடுங்கள்,
*கணவர் உங்களுக்கு என வாங்கி வந்த எந்த ஒரு பொருளையும் பிடிக்காது என ஒதுக்கிவிடாதீர்கள்,
*உங்கள் கணவரிடம் நன்றி (Thanks) சொல்வதை தவிர்த்துவிடுங்கள், ஏனென்றால் உங்கள் கணவர் உங்களுக்காகவே படைக்கப்பட்டவர்கள், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் நீங்கள்தான் அவர்கள் சம்பாதிக்கும் சொத்து சுகம் எல்லாமே உங்களுக்காகத்தான்
No comments:
Post a Comment