Monday, September 26, 2016

பெற்றோர் சொல் கேளீர் !!!

புதுத்தெரு என்றொரு கிராமம், சின்னசாமி ஆடு மேய்ப்பவர், வழக்கமாக ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சின்னசாமிக்கு புல்லாங்குழல் வாசிப்பது என்றால் அவ்வளவு பிரியம், ஆடுகள் மேயத்தவாறு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தான்.

அந்த புல்வெளியைச்சுற்றி முள்வேலி போடப்பட்டிருற்தது. வேலியின் அருகே ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது.

வேலியின் மறுபுறம் ஒரு ஓநாய் ஒன்று வேட்டைக்கு காத்திருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியை பார்த்ததும், எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது

அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, சற்று ஆச்சரியமாக பார்த்தது, ஓநாயை முதல் முறையாக பார்த்ததினால் அதன் நோக்கம் ஆட்டுக்குட்டிக்கு தெரியாமல் “உனக்கு என்னவேண்டும்?” என்று பாசமாக கேட்டது.

ஓநாயோ “நண்பா, நண்பா… நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, இங்கே இளம் புல் எங்கே கிடைக்கும் என்று கேட்டது, இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். 

அதைத் தின்று, தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்றது பாவமாக.

“ஓ…! அப்படியா! நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.

“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

ஓ அப்படியா “சரி அங்கேயே இருங்கள். நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். 

நாம் இரண்டு பேரும் போய் ஜாலியா அதைச் சாப்பிட்டுவிட்டு, நன்பர்களாக சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

ஓநாயின் திட்டம் தெரியாமலும், ஆடு சிநேகத்துடன் செற்றது, ஓநாயின் பக்கம் சென்றதும் அது சட்டென அதன் காலை பிடித்து கொண்டது.

ஆடு சத்தமாக கத்த தொடங்கியது, சின்னசாமியும், தாய் ஆடும் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது. ஓநாய் அதற்குள் ஆட்டுக்குட்டியின் கழுத்தை பிடிக்கும் நேரத்தில் அவர்கள் ஓநாயை அடித்து விரட்டிவிட்டார்கள்.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், 

இந்த மாதிரி ஆபத்தில் மாட்டி கொள்ளாமல் இருந்திருக்கலாம், மதிப்பு வாய்ந்த தன் உயிரை காப்பாற்றிய சின்னசாமிக்கும் பெற்றோர்க்கும் நன்றியோடு நடந்து கொண்டது அந்த ஆட்டுக்குட்டி.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். 

அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு …வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். 

அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.

”படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். 

Saturday, September 24, 2016

8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் 8 நன்மை கள்

8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் 8 நன்மை கள்  !!!
நாம் ஏன் அன்புக்குறியவர்களை கட்டிப் பிடிக்க வேண்டும்.
அதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
உங்களுக்கு வசூல் ராஜா  எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் வரும் ‘கட்டிப் பிடி வைத்தியம்’ நினைவிருக்கிறதா.
நம்மில் பெரும்பாலோனர் ஒரு எளிய அணைப்பினால சந்தோஷத்தை பரப்ப முடியுமா என்று ஆச்சிரியப் பட்டிருக்கிறோம்.
நல்லது. இதற்கு பதில் ஆமாம்.
எங்களது நிபுணர்
டாக்டர் அல்கா சட்டா,
மன நலமேம்பாடுஆலோசகர்,
ஹோப் அண்டு கேர் செண்டர்,
வாஷி சொல்கிறார்.
‘கட்டிப்பிடித்தலில் பல ஆரோக்கியநன்மைகள் உண்டு –
உங்களை சந்தோஷமாகச் செய்வதிலிருந்து,
உங்கள் பல்வேறு நோய்களின் ஆபத்தைக் குறைத்து
உங்களை இளமையாக வைத்திருப்பது வரை.
எனினும்,
நீங்கள் 8 நிமிடங்களை விட குறைவாக கட்டி பிடிக்காமல் இருக்க உறுதி செய்யுங்கள்,
ஏனெனில், ஹார்மோங்கள் வெளியாவதற்கு அத்தனை நேரம் ஆகிறது.
நீங்கள் நேசிப்பவரை
கட்டிப் பிடிப்பதை
ஒரு வழக்கமாக
ஏன் ஆக்கிக் கொள்ள வேண்டும்
என்பதற்கான எட்டு காரணங்கள் இங்கே.
#1. தசைவலிக்கு நிவாரணம்:
ஒரு நாள் முழுவதும் ஒரே இடத்தில் உடகார்ந்து செலவழிப்பதாகட்டும்
அல்லது உடல் செயற்பாடு குறைபாடாக்கட்டும்,
உங்கள் தசைகள்தொடர்ந்து அழுத்தத்தின் கீழ்உள்ளன.
தசை பதற்றத்திலிருந்து நிவாரணம் பெற மாத்திரையை விழுங்குவதை விட,
அணைப்பது உங்களுக்கு உதவலாம்.
அது தசைகள் ஓய்வெடுக்க உதவுவது மட்டுமன்றி,
தசைகளின் பதற்றத்தையும் விடுவிக்கிறது,
அதன் மூலம் வலி மற்றும் அசெள்கரியத்தையும்.
#2. இணைப்பை அதிகரிக்கிறது:
ஒரு வலுவான பந்தத்த்தை ஏற்படுத்த
மற்றும் உங்களுடன் நீங்கள் நேசிப்பவர்களின் இணைப்பை மேம்படுத்த
உங்களுக்குத் தேவையானதெல்லாம் எல்லாம் ஒரு எளிய அணைப்பு தான்.
அது காதலாகவோ அல்ல்து காதல் இல்லாமலோ இருக்கலாம்.
அணைத்தல் உங்கள் மனது மற்றும் உடலை அமைதி படுத்துவது மட்டுமின்றி,
மேலும்பிரசவத்தின்போது உற்பத்தி செய்யப் ப்டும்,
மற்றும் ஒருதாய் மற்றும் குழந்தைஇடையேசிறப்பு இணைப்பை ஏற்படுத்த பொறுப்பாகும்
ஆக்சிடோசின் என்ற ஒரு ஹார்மோனைவெளியிடுகிறது.
#3இரத்த அழுத்தத்தைக்குறைக்கிறது:
  நீங்கள்கட்டி அணைக்கும் போது
எண்டோர்பின்அல்லதுமகிழ்ச்சி ஹார்மோன்கள்ஆ
க்ஸிடாஸினுடன்சேர்ந்துஇரத்தத்தில்கலக்கிறது
.இந்த ஹார்மோன்கள்இரத்த நாளங்கள்விரியச் செய்து
மற்றும் இரத்த அழுத்தநிலையை பராமரிக்க
மற்றும் இரத்தம் சுழற்சியை மேம்படுத்த.உதவுகிறது.
#4. வீக்கத்தைக் குறைக்கிறது
இரத்தத்தில் உள்ள அழற்சி குறிப்பான்கள் அதிகரிப்பினால்,
இதய நோய்,நீரிழிவுமற்றும் மாரடைப்பு ஆகியவற்றிக்கு வழிகோலுகின்றன.
எனினும்,அணைப்பதில் உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதன் மூலம்
உங்கள் வீக்கம அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டது.
அது இலவச உடல்கூறுகளை மட்டுப்படுத்துவதன் மூலம்
அதன் தீய விளைவுகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
#5. மன அழுத்தத்தை விடுவிககிறது :
மன அழுத்தமாக அல்லது சோகமாக உணர்கிறீர்களா?
நீங்கள் நேசிப்பவர்களை கட்டிப் பிடியுங்கள். ஆமாம்,
அது கோரிஸ்டால் உற்பத்தியைக் குறைப்பது மட்டுமன்றி,
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்
மனநிலையை அதிகரிக்கிற செரோடோனின்,அதிகரிக்கிறது.
இதன் வழியாக, அது உங்கள் நரம்புகள் அமைப்பை தளர்த்துகிறது,
மூளையை அமைதிபடுத்துகிறது
மற்றும் உங்கள் உணர்ச்சி இணைப்பை மேம்படுத்தி
மற்றும் நேர்மறை உணர்வை பரப்புகிறது
#6.அடுத்தவர் உணர்வை புரிந்து கொள்ளும் அளவை மேம்படுத்துகிறது:
கட்டி பிடித்தலுக்கு இரண்டு நபர்களிடையே உள்ள் வேறுபாடுகளை,
பச்சாதாபத்தை ஏற்படுத்தி, சரிசெயய முடியும் சக்து உள்ளது
என்று உங்களுக்குத் தெரியுமா?
ஆமாம்,கட்டிப்பிடித்தல் மூளைக்கு நேர்மறை தூண்டுதலை அனுப்புகிறது
மற்றும் உங்களை லேசாக உணரவைக்கும்
உதாரணமாக, ஒரு யுவது மற்றும் அவளது தாய் இடையே ஒரு வாதமிருந்தால்,
ஒரு அணைப்புக்கு அவர்களுக்கிடையே பூசலை தீர்த்து
அவர்களை மேலும் நெருக்கமாக்கும் சக்தி உள்ளது (
உணமை என்னவென்றால்
அதை யாராவது ஆரம்பிக்க வேண்டும்).
இந்த வழியில்,அது ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குவது மட்டுமன்றி,
நபர் நெருக்கமாக இருக்க உங்களுக்கு உதவுகிறது.
#7. நம்பிக்கையைவலிமையாக்கிறது நீங்கள் ஒருவரை அணைக்கும் போது,
அது உணர்ச்சி அளவில் ஒரு நபருடன் ஆழமான இணைப்புக்கு வழிவகுக்கிறது
.இது,நேர்மையான தகவல் தொடர்பிற்கான கதவுகளைதிறக்கும்,
இதையொட்டி ஒருவருக்கொருவர் நேசிக்க
மற்றும் ஒருவருக்கொருவர் முடிவுகளுக்கும் மதிப்புக் கொடுக்க உதவுகிறது.
கட்டி பிடித்தல், ஒரு நேரமறையான சூழ்நிலையை உங்கள் குடும்பத்தில் உருவாக்கி,
மற்றும்சந்தோஷத்தை பரவ உதவுகிறது.
#8. வயதாவதற்கான எதிர்ப்பு விளைவை செலுத்துகிறது
மேலே சொன்ன நன்மைகள் எதுவும்
நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களை
அரவணைத்துக் கொள்ள நம்பிக்கை அளிக்கவில்லை என்றால்,
இதுவாக இருக்கலாம்.
அணைத்தல் மன அழுத்தத்தைக் குறைத்து,
மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுவது மட்டுமன்றி,
உங்களை வீக்கத்திலிருந்தும் தடுக்கிறது.
இது உங்களை ஆரோக்கியமாக் இருக்கவும்
மற்றும் உங்கள் இயற்கையான வயதாகும் செயல்முறையை குறைக்கவும்,
உங்கள் உண்மை வயதை விட குறைவாக உணர வைக்கவும் உதவுகிறது

Kamarajar - Medical seat

ஐயா காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் QUOTA ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிலிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம்.
காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம்.
ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம்.
தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா ? என்று பார்க்கலாம்...
அப்போது இவரது சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.
காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம்.
சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம்.
அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்ததாம்.
ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை.
நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தேடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே. பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.
சிரித்துக்கொண்டே காமராஜர் சொன்னாராம். நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன். அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் கைநாட்டு (கை ரேகை) இருந்ததோ, அவற்றைத்தான் நான் தேர்வு செய்தேன்.
எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத்தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம்.
- தலைமை

Monday, September 19, 2016

Grand maa medicine

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Saturday, September 17, 2016

உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும் - nice story

ராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.
திடீரென்று கடுமையான  மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு  சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
          
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.
பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
       
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு  "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு  வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
       
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம்  சொல்வாயா?" என்றார் .
        
காசைத் தொடாமல் அவன்  சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
        
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல  சரி பாதியைக்  கொடுத்துட்டேன்.  இப்பவாவது வணக்கம் சொல்வியா?"
மெல்லிய புன்னகையுடன்  அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும்  இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .
       
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்  ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு.  இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜா வாயடைத்துப் போனார் .
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை.  உண்மையான  அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்

Friday, September 16, 2016

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்

பொடுகு என்றால் என்ன ?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.
பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்
2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.
3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது
4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்
5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்
7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.
8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது
2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்
3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.
15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

Tuesday, September 13, 2016

தெரிந்து கொள்ள..

தெரிந்து கொள்ள..
 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
 ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
 சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
 ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
 குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
 சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
 சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
 நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
 தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
 காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
 மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
 “லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
 தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
 இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
 காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
 குளிர் காலத்தில் குயில் கூவாது.
 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
 லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
 கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
 கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
 ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
 வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
 ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
 பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
 ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
 தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
 சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
 விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
 சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
 யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
 நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
 டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
 புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
 நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.