Tuesday, August 30, 2016

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217
3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404
4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)
7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 
18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295
24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419
26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495
30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Sunday, August 28, 2016

எது? உலக அதிசயம்.

எது? உலக அதிசயம்.
நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்?
தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.
அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
[படித்ததை பகிா்ந்தது ]
முன்னோா்களின் திறமையையும்& கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்
இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
தாய் மண்ணே வணக்கம்.

Thursday, August 25, 2016

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :
எவ்வளவு சந்தோசமான விஷயம்,பார்த்து விட்டு ஷேர் செய்யுங்கள் :
1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா
2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு
3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி
4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு
6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.
7.பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு
8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு
9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு
10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு
11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு
12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு
13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு
15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு
16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு
17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா
18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி
மூலம் : விக்கிப்பீடியா இணையதளம்.
Among the World Largest 18 Hindu Temples, 12 Temples are in our Tamilnadu.See all and share it.
1. Angkor Wat Temple ,Angkor, Cambodia
2. Sri Ranganathaswamy Temple, Srirangam,Tirchy,Tamil Nadu.
3. Akshardham Swaminarayan Temple,Akshardham,New Delhi
4. Ramakrishna temple,Belur Math,Belur, West Bengal
5. Thillai Nataraja Temple,Chidambaram ,Tamil Nadu
6. Prambanan,Trimurti temple, Yogyakarta, Indonesia
7. Brihadeeswarar Temple,Thanjavur,Tamil Nadu
8. Annamalaiyar Temple,Tiruvannamalai,Tamil Nadu
9. Rajagopalaswamy temple,Mannargudi, Tamilnadu
10. Ekambareswarar Temple,Kanchipuram, Tamil Nadu
11. Varadharaja Perumal Temple,Kanchipuram,Tamil Nadu
12. Thyagarajaswamy Temple,Tiruvarur, Tamil Nadu
13. Jambukeswarar Temple,Thiruvanaikaval,Trichy, Tamil Nadu,
14. Nellaiappar Temple,Tirunelveli, Tamil Nadu
15. Meenakshi Amman Temple,Madurai,Tamil Nadu
16. Vaitheeswaran Koil,Vaitheeswaran Koil,Tamil Nadu
17. Jagannath Temple,Puri,Odisha.
18. Birla Mandir Laxminarayan Temple,New Delhi

Wednesday, August 24, 2016

பெண் !!!

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து
விட்ட கடவுள்,
இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள், இரு நாள் அல்ல.
தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.
இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.
அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.
அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.
இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.
ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்.
ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்.
அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.
அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.
கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.
கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.
தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.
இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”……
கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

Tuesday, August 23, 2016

தமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”

தமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”
https://www.facebook.com/groups/siddhar.science
தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று.
சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்!
சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு.
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!
சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!!
170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள்.
உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!
பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!
சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்)) இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்.
ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது. இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்….!
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…! அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !! அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன் .
இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன.
ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரெக்கார்டு – இதுவரை முறியடிக்கப்படவில்லை.
-Raj
https://www.facebook.com/groups/siddhar.science

Thursday, August 18, 2016

ALWAYS RISE ABOVE ALL THE LAUGHTER AND CRITICISM. STAY STRONG!!!

One day a school teacher wrote on the board the following:
9×1=7
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90
When she was done, she looked to the students and they were all laughing at her, because of the first equation which was wrong, and then the teacher said the following,
"I wrote that first one wrong on purpose, because I wanted you to learn something important. This was for you to know how the world out there will treat you. You can see that I wrote RIGHT 9 times, but none of you congratulated me for it; you all laughed and criticized me because of one wrong thing I did. So this is the lesson...:
'The world will never appreciate the good you do a million times, but will criticize the one wrong thing you do... But don't get discouraged, ALWAYS RISE ABOVE ALL THE LAUGHTER AND CRITICISM. STAY STRONG.' "

மருத்துவர்!!!! - nice story

ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர
சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிரு
ந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு
சிகிச்சைப் பிரிவுக்கு சென்று
கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய
இளைஞனின் தந்தை மருத்துவரின்
வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக்
கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள்,
நான் மருத்துவமனையில் இல்லை...
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால்
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று
பொறுமையாக இருங்கள்"
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை
மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன்
இவ்வாறு உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தால்
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன், "எங்களால்
இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும்
கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்"
என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு
அறிவுரை கூறுவது மிகவும் எளிது"
தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள்
நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்,
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" என்று
சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால்
செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்
கள்" என்று கூறியபடி அவசரமாக
போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம்
பிடித்தவரா?
என் மகனின் நிலையை என்னவென்று
கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "அந்த
மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில்
இறந்துவிட்டார்...
இன்று, அவர் மகனை அடக்கம் செய்யும்
காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... உங்கள்
மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய
வேண்டும் என்று அழைத்தவுடன்
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி
வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப்
புறப்படுகிறார்" என்று கூறினாள்.
# நீதி:
எவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக்
கூடாது,
அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும்,
மனோநிலையைப்
பற்றியும் நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள்
கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக
இருக்க போவதுமில்லை...