Friday, September 10, 2021

செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை வாக்குவாதம் முற்றிவிட்டது.

“நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான். கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.

மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது. வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு காலியாக இருந்தது.

திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது. விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது. தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.

அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.

சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார். சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.

குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாகத் திறந்திருந்தது. அதில் இருந்த நாய்க்கான உணவு தரையில் சிந்தியிருந்தது. மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.

பின்கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது. மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.

ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப, அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள். உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம், நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.

கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது. ஈரத் துண்டுகளும், தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக் கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

மைல் கணக்கில் நீளமான டாய்லட் காகிதம் ஓரத்தில் குவியலாகக் கிடந்தது. கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப் பட்டிருந்தது.

‘டாடி’ என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட கணவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக் கொண்டிருப்பதை கணித்து அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.

கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார்.

உள்ளே....

முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

‘ஸ்வீட்டி’ என்றார், உலர்ந்த நாக்குடன், அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி, “எப்போ வந்தீங்க” என்று கேட்டாள்.

அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர், “இன்று வீட்டில் என்னதான் நடந்தது?” என்று கேட்டார்.

மறுபடியும் சிரித்த மனைவி, “வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது” என்று கூறினாள்.

செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இயல்பாகச் சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

Friday, September 3, 2021

டாட்டாவின்அற்புத அறிவுரை

டாட்டாவின்
அற்புத அறிவுரை.

டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில், வாழ்க்கை, மற்ற கடமைகள் எல்லாவற்றையும் மதிப்பாக உணரும்போது ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்" என்று வாழ்க்கை தத்துவத்தை நண்பருக்கு மென்மையாக புரிய வைத்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. 

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

Sunday, August 29, 2021

இதுதான் காதல்

ரெண்டு பேருக்கும் தோராயமா ஒரு 70 வயசு இருக்கும் .

அவரோட மனைவியை கைய புடிச்சிட்டு கூட்டிட்டு வந்தாரு அந்த பெரியவர்..

சொல்லுங்க பெரியவரே யாருக்கு என்ன பண்ணுது

~என் சம்சாரத்துக்கு மூணு நாள உடம்பு ஏதோ பண்ணுது ..ஆனா என்னனு தெரியல.. கொஞ்சம் என்னனு பாருங்க சார். உங்களுக்கு புண்ணியமா போகும்..

கண்டிப்பா பெரியவரே ..

"BP, pulse, SUGAR, CHOLESTEROL எல்லாம் பாத்தாச்சு. எல்லாம் normal.."

உங்க சம்சாரத்துக்கு ஒன்னும் இல்ல பெரியவரே எல்லாம் நார்மல்.. சாப்பிடாம இருக்குறது நால கொஞ்சம் அப்படி இருக்கும் ..சத்து ஊசிum,saline bottle um போட சொல்றன். போய் போட்டுக்கோங்க...

~ரொம்ப நன்றி சார் .நல்லா இருப்பீங்க நீங்க

இடையில அவங்க சம்சாரம்

~சார் அப்டியே அவருக்கும் ஒரு bottle போடுறீங்களா

ஏன் பாட்டி அவருக்கு என்ன ஆச்சு

~எனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு அந்த மனுசனும் மூணு நாளா சாப்பிடல.. எனக்கு குணமாகனும்னு மூணு நாளா கோவில் கோவில் ah ஏறி இறங்கிட்டு இருக்காரு..

என்ன பெரியவரே .என்ன இதுலாம்..

~எனக்குனு இருக்குற ஒரே சொந்தம் அவங்க தான் ..அவங்களுக்கே இப்டி இருக்கும்போது எனக்கு எப்படி சாப்பாடு உள்ள போகும் சார் ..அவங்கள மட்டும் சரி பண்ணி வீட்டுக்கு அனுப்புங்க சார்.. அதுவே எனக்கு போதும்..

Me literally in crying mode 😕

ரெண்டு பேருக்குமே bottle போட சொல்றன். போய் போட்டுக்கோங்க..

~ரொம்ப சந்தோசம் சாமி

சம்சாரத்த பாத்துக்கோங்க.. ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட கேக்க தயங்காதீங்க பெரியவரே ..

~கண்டிப்பா சார்.. வரன் சார் ..

வாங்க பெரியவரே ..

கிளம்பும்போது அவங்க சம்சாரத்தோட உடமைகளை எல்லாம் கைல எடுத்துக்கிட்டு இன்னொரு கைல அவங்கள புடிச்சிக்கிட்டு கூட்டிட்டு போறாரு...

" Naked pre wedding shoots, big costly wedding அதுலாம் தான் இந்த காலத்துல உண்மையான love அப்டின்னு சமுதாயம் உருவாக்கி இருக்குற இந்த பிம்பத்துல, இதுதான் காதல்.. இவ்ளோ தான் வாழ்க்கையே அப்டின்னு உணர வைக்க இவங்கள மாதிரி சில பேரால தான் முடியும் 😀 💚 "

Friday, August 13, 2021

அன்பானமனைவியும்கணவனும் இணைந்துவிட்டால் வாழ்க்கைசொர்க்கமல்லவா..

இரவு நேரத்தில் சாப்பிடும் போது மனைவி கணவனிடம் கேட்டாள்..... நாம் இருவரில் யார் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்??? என்று.....

இது என்ன கேள்வி? நான் தான் சந்தோஷமாக வாழ்கிறேன் என்றான் கணவன்.

ஒன்றும் விளங்காமல் ஏன்? அது எப்படி?தினமும்ஆபிஸ் போற.......

வீட்டுப் பிரச்சனை._
ஆபீஸ் பிரச்சினை. பிறகு எப்படி நீ ..... என்றாள் மனைவி.

மனைவியின் கன்னத்தைத் தொட்டு நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷம் தான் என்றான்.

ஒன்றும் புரியாமல் திருத்திரு என்று முழித்தாள்.

ஹய் லூசு!!! நாளை Sunday. உனக்கு எங்கு செல்ல ஆசையோ சென்றுவா! இரவு வீட்டிற்கு வா! அப்போது சொல்கிறேன் என்றான்.....

ஞாயிறு இரவு

நண்பனை பார்த்து
விட்டு வீட்டிற்கு வருகிறான். ஹய் செல்லம் எப்போது வந்தாய் என்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

ம்ம் சொல்லு இன்று என்ன? செய்தாய். எங்கு போனாய்?என்று கேட்டான்...

Wow... Sweet.. Memorys...

என் ஊருக்கு சென்றேன். அம்மாவின் சாப்பாடு இன்னும் நாக்கில் நிற்கின்றது. என் நண்பர்களை பார்த்தேன். என் சகோதர சகோதரிகளை பார்த்தேன். அருமையான காதல் திரைப்படம் ஒன்று பார்த்தேன்.

Park, Beech, Restaurant, Zoo... இப்படி எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் உங்களை தான் ரொம்ப மிஸ் பண்ணேன். என்று கண் கசிந்தாள்.

மனைவியின் முகத்தை பார்த்து எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டாயே! இப்போது சொல்லவா? என்றான். என்ன என்ன சொல்லுடா!!! என்றாள் கொஞ்சலாக!

மனைவியின் கையை பிடித்து அவள் கண்ணை உற்று பார்த்து. உன் முகம்தானடி என் சந்தோஷம் என்றான். லூசாடா நீ என்கிறாள் கோபமுடன்...

நான் லூசு தான்டி. ஆண்களின் சந்தோஷமே பெண்கள் தான். ஒரு பெண் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் ஒரு ஆண் வெளியில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றான்.

வெட்கத்தில் போடா Frud. என்றாள்.

பாரு கண்ணாடியில் என் மனைவியின் முகத்தைப் பாரு பா!!!! இதை விட வேற என்னடி எனக்கு சந்தோஷம் என்றான்.

தன் கணவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்மாடா!!! என்று கேட்டு அழுகிறாள்....

அன்பான
மனைவியும்
கணவனும் இணைந்து
விட்டால் வாழ்க்கை
சொர்க்கமல்லவா........

முதலில் அன்பு
செலுத்த பழகுங்கள்.

படித்ததில் பிடித்தது.

Thursday, August 12, 2021

எந்த_மரம்_எதற்கு_உகந்தது_என்பதை_தெரிந்து_கொள்வோம்

எந்த_மரம்_எதற்கு_உகந்தது_என்பதை_தெரிந்து_கொள்வோம்..!!!!

(விழிப்புணர்வுபதிவு)

1.கோடை_நிழலுக்கு
வேம்பு
தூங்குமூஞ்சி
புங்கன்
பூவரசு
மலைப்பூவரசு
காட்டு அத்தி
வாத மரம்.

2. பசுந்தழை_உரத்திற்கு
புங்கம்
வாகை இனங்கள்
கிளைரிசிடியா
வாதநாராயணன்
ஒதியன்
கல்யாண முருங்கை
காயா
சூபாபுல்
பூவரசு.

3. கால்நடைத்தீவனத்திற்கு
ஆச்சா
சூபாபுல்
வாகை
ஒதியன்
தூங்குமூஞ்சி
கருவேல்
வெள்வேல்.

4. விறகிற்கு
வேலமரம்
யூகலிப்டஸ்
சவுக்கு
குருத்தி
நங்கு
பூவரசு
சூபாபுல்.

5. கட்டுமான_பொருட்கள்
கருவேல்
பனை
தேக்கு
தோதகத்தி
கருமருது
உசில்
மூங்கில்
விருட்சம்
வேம்பு
சந்தனவேங்கை
கரும்பூவரசு
வாகை
பிள்ளமருது
வேங்கை
விடத்தி

6. மருந்து_பொருட்களுக்கு
கடுக்காய்
தானிக்காய்
எட்டிக்காய்

7. எண்ணெய்க்காக
வேம்பு
பின்னை
புங்கம்
இலுப்பை
இலுவம்

8. காகிதம்_தயாரிக்க
ஆனைப்புளி
மூங்கில்
யூகலிப்டஸ்
சூபாபுல்

9. பஞ்சிற்கு
காட்டிலவு
முள்ளிலவு
சிங்கப்பூர் இலவு

10. தீப்பெட்டித்தொழிலுக்கு
பீமரம்பெருமரம்
எழிலைப்பாலை
முள்ளிலவு

11. தோல்பதனிடவும்_மைதயாரிக்கவும்
வாட்டில்
கடுக்காய்
திவி – திவி
தானிக்காய்

12. நார்எடுக்க
பனை
ஆனைப்புளி
தென்னை

13. பூச்சிமருந்துகளாகப் பயன்படுத்த
வேம்பு
புங்கம்
ராம்சீதா
தங்க அரளி

14.கோயில்களில் நட
வேம்பு
வில்வம்
நாகலிங்கம்
தங்க அரளி
மஞ்சளரளி
நொச்சி
அரசு

15. குளக்கரையில் நட
மருது
புளி
ஆல்
அரசு
நாவல்
அத்தி
ஆவி
இலுப்பை

16.பள்ளிகளில் வளர்க்க
நெல்லி
அருநெல்லி
களா
விருசம்
விளா
வாதம்
கொடுக்காப்புளி
நாவல்
அசோகம்

17. மேய்ச்சல் நிலங்களில் நட
வெள்வேல்
ஓடைவேல்,
தூங்குமூஞ்சி

18. சாலைஓரங்களில் நட
புளி
வாகை
செம்மரம்
ஆல்
அத்தி
அரசு
மாவிலங்கு

19. அரக்குதயாரிக்க
குசும்
புரசு
ஆல்

20. நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட
நீர்மருது
நீர்க்கடம்பு
மூங்கில்
நாவல்
தைல மரம்
ராஜஸ்தான் தேக்கு
புங்கன்
இலுப்பை.

Saturday, April 17, 2021

Idli

.இட்லி சாப்பிடுங்கள்!

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?

என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
...
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.




Tuesday, April 13, 2021

Read from internet - helping tendency

மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.

அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. சாலையின் வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.

அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம். மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.

குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.

பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.

அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார். அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.

உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பணியாளர் கேட்டார்.

எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார்.

சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,
சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.

பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது. இது பழைய மாடல். மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.
இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.

பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

(அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும்? எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு உள்ளன. எனக்கது போதும்.

இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது.

பணக்காரரோ அல்லது ஏழையோ தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் தந்தை என்பதை நான் உணர்ந்தேன்.

நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன்.

அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாக கடைக்காரரிடம் கூறினார்

'அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,' இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு. இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும். அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். "

ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, "இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்."

பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், "நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை" என்று கூறினார்.

பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு,
நீங்கள் சாப்பிடும் மசாலா தோசை இன்று ஹோட்டலின் அன்பளிப்பு '

தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, "பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்."

அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார். அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார்.

"இல்லை, நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு பொதி யும் பேக்செய்கிறேன்."

இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '

இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர்.

ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.