Tuesday, February 12, 2019

Ahathiyur

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.mk😍

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.
பகிர்வுmk😍

Saturday, February 2, 2019

குசா_தோப்புக்_கரணம்

#குசா_தோப்புக்_கரணம்

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும்.

வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும்.

இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம்.

குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம்.

உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை.

ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும்.

வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே.

உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம்.

இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள்.

ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும்.

சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம்.

பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம்.

சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும்.

பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தைகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரசவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

தகவல் சிவனடியார்

Monday, November 19, 2018

Like it

எட்டாம் வகுப்பு படிக்கும்  மாணவர் தனது  கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

அப்போது ஒரு மாணவர்  கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

மாணவர் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

மாணவர் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

மாணவர் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் மாணவர்  கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை.  விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மாணவர் வகுப்பில்  உள்சென்றார்

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

மாணவரின்  தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். மாணவரின்  ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி மாணவரிடம்  வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற மாணவர்  எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் மாணவரை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக மாணவருக்கு  நினைவுக்கு வர,  தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினான்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

       அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம்  தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். மாணவரும்  சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டான் . அதற்கு  தாத்தா கூறிய வார்த்தைகள் தான் மாணவர்  மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைவோம் .

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன?
சிந்தியுங்கள் நண்பர்களே???

*இப்போது உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்கள்  நம்மை சிந்திக்க விடாமல் நம்மை அடிமையாக அலுவலக உதவியாளர் பணிக்கு தயார் படுத்திட உருவாக்க பட்ட பாடத்திட்டம் தான் இன்றைய போதனை வழி கல்வி முறையும்,*
*புரிந்து கொள்ளாத மொட்டை  மனப்பாட கற்றல் முறையும்.*

படித்ததில் பிடித்த பதிவு.
=======================

Thursday, November 15, 2018

Don't angry

சினம் தவிர்ப்போம் !
================

யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.
அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
`
துறவி விளக்கினார்.
"ஒரு ஏரியில் காலியானபடகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.
'இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?' என்று கோபமாகக் கண்களைத்திறந்து பார்த்தால் அது வெற்றுப்படகு!
`
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என்கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?
`
யாராவது என்னைக் கோபப் படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்;
இதுவும் வெற்றுபடகுதான் என்று அமைதியாகி விடுவேன் !

ஞானம் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும்
வரலாம் !

Monday, November 5, 2018

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்ப்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்ப்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?

திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,

காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,

நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,

இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்,

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.

இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சரப் படி" என்று அழைக்கப்படுகின்றது,

அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.

"கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.

இந்தக் கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளைக் குறிக்கின்றது,
இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
9 வகையான சக்தியைக் குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள்,
6 சாஸ்திரங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது...
ॐஓம் நமச்சிவாய ॐ

Sunday, November 4, 2018

Amma

Mummy *** டேய் மகனே வந்திருடா அம்மாவுக்கு உன்னை பார்க்கணும்டா

son *** போயிரு பேசாமல் உன்னை நான் இனிமேல் பார்க்கவே கூடாது

mummy *** அப்படி சொல்லாதே மகனே அம்மா இனிமேல் உன்னை திட்டமாட்டேன்டா

son *** ஏன் உனக்கு போண் பண்ணாமல் இருக்க முடியாதா இனிமேல் நீ போண் பண்ணினால் நான் செத்திருவேன்.,

mummy *** அழுதகிட்டு அய்யோ வேணாம் டா இனிமேல் பண்ணமாட்டேன்,,,

ஒரு மாதம் கழித்த நிலையில்!!!

frnd *** டேய் நான் ஊருக்கு போகிறேன்டா மச்சி
டேய் என் அம்மாவை பார்க்க ஆசையாக இருக்குடா

boy *** என்னடா சொல்கிறாய் அம்மா,அம்மானு சொல்லீட்டு இருக்கிறாய் கொஞ்சம் நாள் பார்க்காமல் உன்னால் இருக்கமுடியாதா??

frnd *** ஏன்டா அது என் அம்மாடா நான் எவ்வளவோ திட்டீருக்கிறேன்.ஏய் எவ்வளவோ நாள் நான் வீட்டிற்கே போகாமல் இருந்திருப்பேன் அப்போ எல்லாம் எனக்காக அம்மா காத்திருப்பாங்கடா.,.

boy *** ஏய் என்னடா சொல்கிறாய் அப்போ அம்மா நம்மளை திட்டினால் அது நமக்கு பாசமாடா

frnd *** ஏன்டா இதுகூட தெரியாமலா இத்தனை வருஷமா இருக்கிறாய்

boy *** டேய் என் அம்மாவை பார்த்து பல வருடங்கள் ஆயிடிச்சிடா நான் அவங்களை வெறுத்து தவறாக பேசீட்டேன்!!

போடா டேய் என்று அவனை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்தான்!!

frnd *** எங்கடா உன் வீடு

boy ***- வாடா அதோ இருக்கின்றது

இருவரும் வீட்டிற்கு சென்றதும் வீடு பாழடைந்த நிலையில் இருந்தது அங்கே ஒரு மரப்பெட்டி மட்டும் இருந்தது!!!

அந்த பெட்டியில் திறந்து பார்த்தான் அதில் அவனுடைய சிறிய வயது போட்டோவும்,அவனுடைய விளையாட்டு பொருட்களும்கூடவே ஒரு கடிதம் கூட!!!

frnd *** டேய் உன் அம்மா எங்கே டா

boy **** அந்த கடிதத்தை படித்தான்!!

என் அன்பு மகனே நான் உன்னை பெற்று எடுத்ததுமே நான் அடைந்த சந்தோஷம் பெரியது,ஆனால் இந்த தாயிக்கு இப்போது ஒரு ஆசை எனக்கு உன்னை பார்க்க வேண்டும்
நீ சண்டை போட்டு சென்றாய்ஆனால் இந்த தாயை நீ வெறுத்தாலும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் எனக்கு நீதான் உலகம் ,,
கடைசியாக உன்னை போணில் அழைத்தேன் ஏன் தெரியுமா அம்மா உடல்நிலை சரியில்லாமல் தனிமையாக அவதிபட்டேன் உன் அப்பா(கணவன்)அவர் இருந்திருந்தால் கூட என்னை இப்படி வலியில் துடிக்க விடமாட்டார்,
நான் இறந்த பிறகும் நீ வரமாட்டாய் என்று தெரியும் அதனால்தான் என் பிணத்தை அனாதை பிணமாக எரியுங்கள் என்று சாகும்முன்பே சொல்லிவிட்டேன்,,,,ஒரு தவறு செய்தாய் என்று தான் உன்னை அடித்தேன் ஆனால் நீயோ இந்த அம்மாவுக்கு பெரிய தண்டனை கொடுத்துவிட்டாய்!!!!

frnd **** அடப்பாவி(அழுகிறான்) நீ எல்லாம் ஒரு மனுஷானாடா என்று ஓடி போய் அவனை உதைத்தான்,,,

boy *** டேய் நான் தெரியாமல் பண்ணீட்டேன்டா

frnd **** பார்த்தாயா இப்போது கூட உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணிர் வரவில்லையாடா

boy **** டேய் என் அம்மாவை தவறாக நினைத்துவிட்டேன்டா என்று அம்மா என்று கத்தி அழுதான் !!!!!

அம்மா பக்கத்தில் இருக்கும் போது அவங்க அருமை தெரிவதில்லை ,,,கண்ணுக்குத் தெரியாத கடவுளை தினமும் கோயிலுக்கு போய் கும்பிடும் நீங்கள் உங்கள் கண்முன்னே இருக்கும் தெய்வத்தை(அம்மா)கும்பிட ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை !!!!

பிடித்திருந்தால் comment பண்ணுங்க நட்புகளே!!!!!

அம்மாவை வெறுப்பவர்களுக்கு என்னுடைய இந்த கதை சமர்ப்பணம்!!

படித்ததில் பிடித்தது