Friday, October 29, 2021

குட்டி கதை

குட்டி கதை ,,

ஒரு வைத்தியர் மிக அவசரமா ஓடி
வந்து ஒபெரசன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தார்.....

அங்கு பிள்ளையின் அப்பா மிகவும் கோபத்துடன் இவ்வளவு லேட்டாவா வருவீங்க என் பிள்ளைக்கு என்னவானாலும் நடந்தா யார் பொறுப்பு என்று காரசாரமாக பேசினார்...

வைத்தியர் : சிரித்த முகத்துடன் கூறினார் எனக்கு வைத்தியசாலையில் இருந்து call வந்தது அவசரமாக ஓடி வந்துட்டேன்... பொறுமையாக இருங்கள் உங்கள் மகன் இறக்கவில்லை.. நான் வந்துவிட்டேன் பார்த்துக்கொள்கிறேன் என்றார்..

ஆமாம் சொல்விர்கள் உங்கள் மகனுக்கு இப்படி ஒன்று நடந்தால் இப்படி லேட்டா வந்து இப்படியெல்லாம் பேசுவீங்களா எண்டார் பிள்ளையின் தகப்பனார்..

Dr சொன்னார். புன்னகையுடன் பொறுமையாக இருங்கள் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபரேஷன் ரூம்க்கு சென்று சில மணித்தியாலங்கள் கழித்து வெளியே வந்து உங்கள் மகன் மிக்க நலமாக உள்ளார்.. மேலதிக விடயங்களை nurse இடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டு சென்றார்....

அவ்விடம் வந்த nurse இடம் தகப்பனார் பிள்ளை தொடர்பில் கேட்டுவிட்டு Dr.ஏன் அவசரமா போகிறார் என்று வினவினார். அதற்க்கு nurse சொன்னார்....

Dr இன் மகன் நேற்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தார். அவரது இறுதி கிரியை மயானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தநேரம் உங்கள் பிள்ளையின் நிலை குறித்து call பண்ணிய போது அதை விட்டுட்டு Dr.உடனே ஓடி வந்து ஆபரேஷன் செய்து விட்டு மீண்டும் மகனின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டார் என nurse கூறினார்...

தகப்பன் தான் ஆவேசப்பட்டது தவறு என்பதை உணர்ந்தவனாக மிகுந்த கவலையுடன் தன் மகனை பார்க்க
சென்றார். 😢😢😢

நீதி :: யாரையும் வெளியில் பார்த்து இடை போடாதீர்கள் அவர்களுக்குள்ளும் உங்களை விட அதிகம் பொறுப்பும் கவலையும் இருந்திருக்கும்.... எனவே வார்த்தைகளை பேணிக்கொள்ளுங்கள்.. !!

படித்ததில் மனதை தொட்டது.

Tuesday, October 19, 2021

கணவனை அதிகம் நேசியுங்கள்

கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத் தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள்.

அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார்.
அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு. இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கதையின் நீதி :-

கணவனை அதிகம் நேசியுங்கள்...
அ"ன்பானவன் எதற்கும்
ஆ"சைப் படாதவன், துன்பத்திலும்
இ"ன்பம் தருபவன், மனதில்
ஈ" கோ இல்லாதவன் எப்போதும்,
உ"ண்மையானவன் என்றும்,
ஊ" ரில் வாழ்ந்தாலும்
எ" ப்போதும் யாரையும்
ஏ" மாற்றத் தெரியாதவன்,
ஐ" ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ" வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ" டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ" வையார் போல் தன்னுடைய ஆசைகளைத் துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்...

எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள் கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்... இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை.

2 things to learn from this story

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.
பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் “எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது
நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.

இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;

01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.

02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

Wednesday, October 13, 2021

பெண் தெய்வம்

*தாம்பத்தியம்_என்பது*

*வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..!*

*மனைவி வந்து கேட்பாள்:* *"என்ன சாப்பிட்றீங்க?* *இட்லியா..?* *தோசையா என ..?”* *கணவனின் மனம் விரும்பும் தோசையை ...* *ஆனால் அவன் சொல்லுவான் “எது வேணாலும் பரவால என ..!.” அவள் தோசை வார்ப்பாள்*.

*அவள் மறுபடி வந்து கேட்பாள்: “தோசைக்கு சட்னி செய்யவா, இல்ல மத்தியானம் வெச்ச சாம்பாரே போதுமா என ..?”*

*அவன் மனம் நினைக்கும் ‘காரசட்னியையும், சாம்பாரையும் கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என ..!’*
*ஆனால் அவன் சொல்லுவான்: “சாம்பாரே போதும் என..!*

*அவள் சுட சுட தோசையும் , சாம்பாரோடு, காரசட்னியும் செய்து எடுத்துக்கொண்டு வருவாள்..!*

*கடைசி தோசைக்கு பொடி, எண்ணைய் இருந்தால் நன்றாக இருக்குமே..!’ என்று மனதில் தோன்றினாலும், ‘எதுக்கு ஒரு தோசை சாப்பிடுவதற்கு ஏகப்பட்ட வேலை..?’ என்று அவன் நினைத்துக்கொண்டே சாப்பிட்டால்........*

*அவள் பொடியையும் எண்ணையையும் எடுத்துக்கொண்டு வருவாள்...!*

*கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி சிறந்த தாம்பத்யத்துக்கு சிறப்பாக மனைவிக்கு உண்டு..*

*ஏராளமான ஆண்கள் மனைவியிடம் அன்பை வெளிக்காட்டியதில்லை. உடல்நலன், மனநலன், உணவு, மாத்திரைகள், எல்லாம் அவனுக்கு தோதாய் நடக்க அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான்.*

*மனைவியின் உடல்நலம், மனநலம், உணவு, சந்தோஷம், துக்கம் எல்லாம் அவளுக்கு அவள்தான் துணை ஆறுதல்... கணவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.*

*அவன் வாழ்நாள் முழுதும், அவன் தேவைகள் பார்த்துக் கொள்ளப்படும்; அவன் குணக்குறைகள் மன்னிக்கப்படும் என்று வாழும் ஆண்கள் அதற்கு அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லாததை என்னவென்று சொல்லுவது.* ,

*ஆண்களுக்கு பணிவிடை செய்யவென்று படைக்கப்பட்டவள் அல்ல பெண்.. ஆனாலும் செய்கிறாள்.*

*ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்... ஆனாலும் தாயாகிறாள் ஏன்?...*

*ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள கடவுள்... அதனால்தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள். அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ் உலகையும் குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் வழி நடத்துகிறது...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

-வெற்றியாளன்