படிப்பினையுள்ள ஒரு சம்பவம்
சிரியாவிலுள்ள ஒரு பாடசாலையில் நடந்த சம்பவமே இது.
ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) ஜோடி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியானவை யாகக் காணப்பட்டன.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரது பெயர்களையும் எழுதிப் போடுமாறு கூறினார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குழுக்கி அதில் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார்.
கணவனும் சந்தோஷப்பட்டார்.
எனினும் அவ்வாசிரியை வழமைக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியிலுள்ள காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "வபாஃ" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.
அதாவது அனைத்து மாணவிகளும், மாணவியின் நிலையைப் புரிந்து அம்மாணவிக்கு சப்பாத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முனைந்தனர்.
படிப்பினை
இவ்வாறான தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் மீதும் கடமையாகும்.