Wednesday, January 15, 2020

To all Parents

*To all parents._*

There was a very brilliant boy, he always scored 100% in Science.
Got Selected for IIT Madras and scored excellent in IIT.
Went to the University of California for MBA.
Got a high paying job in America and settled there.
Married a Beautiful Tamil Girl.
Bought a 5 room big house and luxury cars.
He had everything that make him successful but a few years ago he committed suicide after shooting his wife and children.

*WHAT WENT WRONG?*

California Institute of Clinical Psychology Studied his case and found “what went wrong?”

The researcher met the boy's friends and family and found that he lost his job due to America’s economic crisis and he had to sit without a job for a long time. After even reducing his previous salary amount, he didn't get any job. Then his house installment broke and he and his family lost the home. they survived a few months with less money and then he and his wife together decided to commit suicide. He first shot his wife and children and then shot himself.

The case concluded that the man was Programmed for success but he was not trained for handling failures.

Now let's come to the actual question, What are the habits of highly successful people?

First of all, there are many people who will tell you about success habits but today I want to tell you that even if you have achieved everything, yet there is a chance to lose everything, nobody knows when the next economic crisis will hit the world. The best success habit according to me is getting trained for handling failures.

I also request every parent, please not only program your child to be successful but teach them how to handle failures and also teach them proper lessons about life. Learning high-level science and maths will help them to clear competitive exams but a knowledge about life will help them to face every problem. Teach them about how money works instead of teaching them to work for money. Help them in finding their passion because these degrees will not help them in the next economic crisis and we don’t know when the next crisis will hit the world.

*"Success is a lousy teacher. Failure teaches you more."*
Good read.

Thursday, January 9, 2020

Vaigai Dam

காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். அப்போதைய எம்.எல்.ஏ. என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், 'ஆண்டிப்பட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்" என்றார். 

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், 'கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்  என்றார். கலெக்டர் வந்தவுடன், 'இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்" என உத்தரவிட்டார்.

தியாகராஜன் எம்.எல்.ஏ.வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், ஆனால் இவர் சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கி றாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அதற்கு பதில் அளித்த காமராஜர், 'பொருட்களை ஏன் அபகரிக் கின்றனர்? அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருட்களை அபகரிப்பது குறையும்" என்றார்.

கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டுப் பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடனே செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.

அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்சக்கணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.

Sunday, January 5, 2020

கதை அல்ல நிஜம்

#கதை அல்ல #நியம்

ஒரு நாட்டு மன்னன் தன் அரண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.

அப்பெண்ணோ "மன்னா...!!! நடனம் ஆடுவது எங்கள் குலதொழில். நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள். ஆதலால் இது வேண்டாமே" என்றாள்.

மன்னவனோ "ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கதான் வேண்டும். வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகிறேன்" என்றான்.

அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை. மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள். அப்பெண் "சரி மன்னா... நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாங்கள் விருந்து வைக்கிறேன். அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம்" என்றாள்.

மன்னனும் சென்றான்.

அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.

மன்னன் எனக்கு சாப்பிட பொறுமை இல்லை. நீயே ஊட்டி விடு என்று கூறினான். அப்பெண்ணும் ஊட்டி விட்டாள்.

மன்னன் சுவைத்தான். விருத்து முடிந்தது.

மன்னனிடம் கேட்டாள்...

"மன்னா...!!! 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது?

"நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான் மன்னன்.

"மன்னா நாங்களும் அப்படிதான். பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றாள்.

மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கினார்.

"தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான்.

இது கதை அல்ல உண்மை

நம் வீட்டிலும் பெண்கள் உண்டு.

பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்களாக நினைத்து #சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள்.

#நட்பு_வளர்க்கும்_பிற_பெண்கள்_மனதை #காயப்படுத்தாதீர்கள்!

Wednesday, January 1, 2020

தன்மானம்

பெண் (பொன்) மனம்□

அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார்.

‘மனசு சரியில்லை’’ என்றாள் மகள்.

‘‘உனக்கு அன்பான குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா.

‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.

‘‘என்னவென்று சொல்... நானும் தெரிந்துகொள்கிறேன்’’ என்றார் அப்பா.

மகள் சொல்ல ஆரம்பித்தாள்...

‘‘என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அவளிடம் நட்புடனும் உரிமையுடனும் பழகுவேன்.

தன் குழந்தையின் முதலாம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவள் ஆசைப்பட்டாள். அதற்காக அலுலவகத்தில் ஒரு சில ஊழியர்களிடம் பண உதவி கேட்டாள். அவர்கள் மறுத்துவிட்டார்கள். நான் அதைக் கேள்விப்பட்டு, அவள் கேட்காமலேயே முன்வந்து பணம் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு எனக்குத் திரும்ப திரும்ப நன்றி சொன்னாள்.

அதன்பிறகு பிறந்த நாள் நெருங்க நெருங்க அவள் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். பிறந்த நாளுக்குக்கூட என்னை பெயருக்கு அழைத்தாளே தவிர, மனமார அழைக்கவில்லை. ஆனால் அவளுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்களை எல்லாம் திரும்பத் திரும்ப அன்போடு அழைத்தாள். என்னை வேண்டுமென்றே ஒதுக்கியதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நான் அவளிடம், ‘பிறந்த நாள் அன்று எனக்கு வேறு வேலை இருக்கிறது, வர முடியாது’ என்று சொல்லிப் பார்த்தேன். அவள் உடனே, ‘சரிங்க மேடம், உங்க இஷ்டம்’ என்று சொல்லிவிட்டாள். விழாவுக்கு வரச்சொல்லி என்னை வற்புறுத்துவாள் என்று எதிர்பார்த்தேன்.’’

‘‘பிறந்த நாள் முடிந்து விட்டதா? நீ போகவில்லையா?’’ என்று கேட்டார் அப்பா.

‘‘நேற்று பிறந்த நாளுக்குப் போகவில்லை. அந்தக் குழந்தைக்காக இந்த பொம்மையெல்லாம் வாங்கி வைத்தேன். அவள் அழைக்காத அலட்சியமும், ஒரு குழந்தைக்கு பொம்மை வாங்கி வைத்து கொடுக்க முடியாத குற்ற உணர்ச்சியும் என்னை துன்புறுத்துகிறது அப்பா. என்னால் தூங்கவே முடியவில்லை’’ என்றாள் மகள்.

அப்பா உடனே, ‘‘நீ அவளுக்கு பண உதவி செய்தபிறகு அப்பெண்ணை பொதுவில் அனைவர் முன்னாலும் எதற்காகவாவது உரிமையுடன் கிண்டல் செய்தாயா?’’ என்று கேட்டார்.

‘‘நினைவில்லை அப்பா.”

‘‘யோசித்து வை. நிச்சயம் அப்படி ஒன்று நடந்திருக்கும். அப்பா உனக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வருகிறேன்.’’

அப்பா வந்ததும் மகள் ஆர்வத்துடன் சொன்னாள். ‘‘ஆமாம் அப்பா, நான் பண உதவி செய்து ஒருவாரத்தில் அவள் ஒரு மஞ்சள் கலர் புடவை அணிந்து வந்திருந்தாள். அது அவள் கணவன் அன்போடு எடுத்துக் கொடுத்ததாம். நான் அதைப் பார்த்த உடனே, ‘என்னப்பா மஞ்ச கலரு ஜிங்குசாண். இதை எல்லாம் கட்டினா கூலிங்கிளாஸ் போட்டுதான் பாக்கணும் போல கண்ணு கூசுது’ என்றேன். அதற்கு சுற்றி இருந்த அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவளும் சிரித்தாளே!’’

‘‘நீ அவள் குழந்தையின் பிறந்த நாளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவமானப்படுத்தினால் பதிலுக்கு உன்னிடம் எப்படி அவள் கோபத்தை, இயலாமையை காட்ட முடியும். வேறு வழியில்லை, சிரித்துதானே ஆகவேண்டும். நான் சொல்வது மாதிரி செய்’’ என்று அப்பா ஒரு யோசனை சொன்னார்.

அதன்படி மறுநாள் காலை ஒரு மணி நேரம் முன்பாகவே மகள் கிளம்பி அந்தப் பெண் வீட்டுக்குச் சென்றாள். தொட்டிலில் கிடந்த மகனை தூக்கிக் கொஞ்சி, ‘‘பிறந்த நாளுக்கு வரமுடியலடா கண்ணா! இந்தா ஆன்ட்டி உனக்கு பொம்மை வாங்கி இருக்கேன் பாரு’’ என்று பொம்மையை அருகில் வைத்தாள்.

அதன்பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘‘நேத்து எங்க குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல என் சொந்தக்கார பையன் ஒருத்தன், என் பத்தாம் வகுப்பு மார்க் குறைவானது என்று பொதுவில் சொல்லி கிண்டல் செய்தான்.

அவன் அதை ஜாலிக்காக செய்தாலும் பொதுவில் அப்படி கிண்டல் செய்ததை என்னால் தாங்கமுடியவில்லை. அப்போதுதான் நான் உன்னை ‘மஞ்சள் கலர் ஜிங்குசாண்’ என்று கிண்டல் செய்தபோது உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. என்னை மன்னித்துக் கொள்’’ என்றாள்.

வேலை செய்யும் பெண் கண்ணீர் மல்க இவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

அங்கிருந்து பைக்கை எடுத்து அலுவலகத்தை நோக்கி வரும்போது, ‘ஒரு மனிதனுக்கு நீ கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவன் தன்மானத்தில் கைவைத்துவிட்டால் அவன் உன்னை எதிர்க்கவே செய்வான்’ என்று அப்பா சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.

புரிதலுடன் சிரித்துக் கொண்டாள்.

Titanic

'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.

கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.

ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.
அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்...

'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள்.

அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!''