Saturday, November 30, 2019

தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம்

படித்ததில் பிடித்தது.

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு💗

Tuesday, November 5, 2019

பார்த்தீனியம்

பார்த்தீனியம்!!

வெளிநாட்டிலிருந்து கோதுமை
இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு
திட்டமிட்டே கலந்து விடபட்ட
விஷ விதை..

ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானா
விதைகள் காற்றில் பரவுகிறது..
ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம் கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..
இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்கு தீராத சளி,
பெரியவர்களுக்கு தும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..
இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..

அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..
இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்து
மழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு போய்விடுகிறது..
மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது..

மூன்று வருடங்களுக்கு முன் யோசித்தேன்..
இந்த விஷ செடியை அழிக்க என்ன வழி என்று..
தேடினேன்..

பல புத்தகங்களில் தேடினேன்..

ஒரு சிறு தகவல் கிடைத்தது ..

பத்து லிட்டர் நீரில் ஒரு கிலோ கல் உப்பை கரைத்து தெளித்தால் இந்த பார்த்தீனியா அழிந்துவிடும் என்று..
முயற்சி செய்தேன்..

பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பு என்று..
விஷசெடி காயவில்லை..
இரண்டு கிலோவுக்கும் இல்லை
மூன்று இல்லை,
நான்கு கிலோவுக்கும் இல்லை,

ஐந்து கிலோ என்ற வீதத்தில் கலந்து தெளித்த பிறகுதான் இந்த விஷ செடி காய தொடங்கியது.

ஒரு கிலோ உப்பு பத்து ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு..
பார்த்தீனியா பூ பிடித்த பின் தெளித்தால் முற்றிலும் அழிந்து விடுகிறது..
நான் இப்போது இந்த கல் உப்பை தெளித்த பிறகுதான் ஓரளவு அந்த விஷ செடியை அழிக்க முடிந்தது..

பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்த பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது..

வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை..
தெளித்து அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது.
அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது..
அதிகமாக இந்த விஷ செடிகள் இருந்தால் விசைதெளிப்பானிலும்,
குறைவாக இருந்தால் கைத்தெளிப்பானிலும்
தெளிக்கலாம்..

who is rich?

Someone asked the richest man in the world, Bill Gates, “Is there anyone richer than you in the world ?”

Bill Gates replied, “Yes, there is a person who is richer than me.”

He then narrated a story.

“It was during the time when I wasn’t rich or famous.

“I was at the New York Airport when I saw a newspaper vendor.

“I wanted to buy one newspaper but found that I didn’t have enough change. So I left the idea of buying and returned it to the vendor.

“I told him of not having the change. The vendor said, ‘I am giving you this for free.’ On his insistence I took the newspaper.

“Coincidentally, after two to three months, I landed at the same airport and again I was short of change for a newspaper. The vendor offered me the newspaper again. I refused and said that I can’t take it for I don’t have change today too. He said, ‘You can take it, I am sharing this from my profit, I won’t be at loss.’ I took the newspaper.

“After 19 years I became famous and known by people. Suddenly I remembered that vendor. I began searching for him and after about 1½ months of searching, I found him.

“I asked him, ‘Do you know me?’ He said, ‘Yes, you are Bill Gates.’

“I asked him again, ‘Do you remember once you gave me a newspaper for free?’

“The vendor said, ‘Yes, I remember. I gave you twice.’

“I said, ‘I want to repay the help you had offered me that time. Whatever you want in your life, tell me, I shall fulfill it.’

“The vendor said, ‘Sir, don’t you think that by doing so you won’t be able to match my help?’

“I asked, ‘Why?’

“He said, ‘I had helped you when I was a poor newspaper vendor and you are trying to help me now, when you have become the richest man in the world. How can your help match mine ?’

“That day I realized that the newspaper vendor is richer than I am, because he didn’t wait to become rich to help someone.”

People need to understand that the truly rich are those who possess a rich heart rather than lots of money.

It’s very important to have a rich heart❤️

Sunday, November 3, 2019

love seed

#அன்பு_செய்வீர் ❤️... 

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.🍋 

பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,

இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.🍋 🍋

உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார்,

உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,

ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.

உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,

ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.

நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்
அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,
அந்த பாட்டியிடம்,

அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை
அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.

உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு,
அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,கொடுத்து சாப்பிட வைக்கிறான்.

இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்,

நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,

இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தானேங்க
ஜீவன் இன்னும் இருக்கு.....

#அன்பை விதையுங்கள்...அதையே அறுவடை செய்வீர்கள்....