Wednesday, September 26, 2018

Husband and wife must read

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

Tuesday, September 25, 2018

மனைவி

முதலிரவு அறை..

கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்..

கதவு திறக்கபட ..
பட்டென்று கண்களை துடைத்து கொண்டேன்..
என் கணவர்அருகில் வந்து அமர்ந்தார்..
"இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா..
இன்னமும் என் ேமல உனக்கு நம்பிக்கை வரல .. "
" அப்டி எல்லாம் இல்லீங்க மாமா...!"
"என் கிட்ட வா .. ம்ம்.."
ஆதரவாய் என்னை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்...
"இங்க இருக்குற யாருக்குமே என்னய பிடிக்க லியே மாமா... எதுக்கு எல்லாரையும் எதுத்து எனக்கு தாலி கட்டுனீங்க.."
சொல்லும் போதே குரல் தழுதழுத்து கரை புரண்டு ஓடிய கண்ணீர் கணவரின் நெஞ்சை நனைத்தது...

நடந்தது இதுதான்..

பணக்கார வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள் என் மனைவி ..
எனக்கு தூரத்து உறவான என் மாமாவின் மகள் ..
சிறு வயதிலயே தாயை இழந்து ...
தந்தையின் நிழலில் துளியும் பேராசை இல்லாமல் பணத்தை சுற்றியே வளர்ந்தாலும்..
அணை வருக்கும் எல்லையில்லா உதவிகளை ெசய்யும் பெருங்குணம் கொண்ட பேரழகு படைத்தவள்..

எங்களது குடும்பம் கூட்டுக்குடும்பம்...
தரகர் மூலம் வந்த வரன் அவள் ..
தூரத்து உறவினரான என் மாமாவின் மகள் என்று தெரிந்த வுடன் ..
கல்யாண வேலைகள் துரிதமாக நடந்தது..

பத்திரிக்கைகள் அச்சிடபட்டு பத்தே நாட்களில் முகூர்த்தமும் குறிக்க பட்டது...

நாம் ஒன்று நினைக்க ெதய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல அடுத்து வந்த நாட்களில் அனைத்தும் மோசமாகவே நடக்க ஆரம்பித்தது...!

திருமணத்திற்கு 4 நாட்கள் இருக்க..
என் மனைவியின் அப்பா ெநஞ்சுவலியால் இறந்து போனார்..

எனக்கு மட்டுமல்ல
அனைத்து உறவினர்களுக்கு மே பேரதர்ச்சியாய் இருந்தது..

என் மனைவி ஆதரவில்லாமல் நிறுத்தப்பட்டாள்..

அவளின் சொத்துக்களை பங்கு ேபாட வந்த உறவுகள் யாரும் அவள் கஷ்டத்தை பங்கு போட தயாராக இல்லை..

அவ்வளவு ஏன்..

என் வீட்டிலும் அவளை பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன ...

சில வார்த்தைகள் என் காதில் விழுந்து ரணமாக மாற வைத்தது..

"நா அப்பவே சொன்னேன்ல .. எனக்கு தெரியும் கடைசில இந்த மாதிரி லாம் நடக்கும்னு..!" இது அப்பாவோட அக்கா..

"சின்ன வயசுலயே அம்மாவ முழுங்குனவ .. இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பனயும் முழுங்கிட்டா ... தரகர் சொல்லும் போதே எனக்கு சந்தேகம் தான்.." இது என் இன்னொரு அம்மாவாக நான் நினைக்கும் என் அண்ணி..

"எனக்கென்னமோ அவ ராசி இல்லாதவளா இருப்பானு தோனுது..." இது நான் உயிராய் நினைக்கும் என் தங்கை..

இன்னும் நிறைய .. நிறைய ..

நினைக்க நினைக்க மனம் கனத்து போனது.

என் உறவுகள் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போனது அந்த ெநாடியில் இருந்து..

இறுதியில் திருமணத்தை அனைவரும் கலந்து பேசி நிறுத்தி விட்டார்கள்...

என் மனைவியின் கண்ணீர் என் உயிரை அரித்துக் ெகாண் டிருந்தது..

இறுதி முடிவு எடுத்தவனாய் என் அம்மாவின் முன்னால் வந்து நின்றேன்..
சிறு வயது முதலே நான் கண்ட முதல் ெதய்வம் அம்மாதான் என்பதை மனதார நேசிப்பவன்..

" உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம,.. உன் மனசுக்கு எது சரினு படுதோ... அத ெசய் .. என் மகன பத்தி எனக்கு ெதரியும்..! யார் என்ன ெசான்னாலும் நா உன் கூடவே இருப்பேன் சரியா.. போ...!"

அம்மாவை தவிர
யாருக்குமே என் மனைவியை பிடிக்கவில்லை...

அனைவரின் எதிர்ப்பையும் மீறி ..
எனக்கு குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் ....
ஒரு சின்ன ேகாவிலில் ...
என் அம்மா தாலியை எடுத்து கொடுக்க ..
மூன்று முடுச்சி ேபாட்டு அவளை என் மனைவி ஆக்கினேன்..

தன் கெளரவம் பாதித்ததாக அப்பா ெசால்ல..
தன் எதிர்காலமே நாசமானதாக என் தங்கை ெசால்ல..
என் கூட பிறந்தவன் ெச த்து விட்டான் என்று அண்ணன் ெசால்ல..
இன்னும் எண்ணற்ற உறவினர்களின் சாபங்களோடு ..

என் எதிர்காலம் ெதாடங்கியது...

அம்மாவின் அடம் பிடிப்பால் எங்கள் சாந்தி முகூர்த்தமும் குறிக்கப்பட்டது..

தற்சமயம்..

அவளின் கண்ணீர் நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது..

"அம்மு .. ேடய், .. என்ன பாரு .. என்ன பாரு .. சொல்ேறன்ல..."
மெல்ல நிமிர்ந்தாள்...
"உன் கண்ணுல கண்ணீர பாக்க வா எல்லாரையும் எதுத்து உன் கழுத்துல தாலி கட்டின .. ம்ம்ம்..."
அவள் கண்கள் சிவந்து ... கன்னங்களும் சிவந்து ...
அவளின் காயங்களை எனக்கு தெரியபடுத்த ...

அவளை சமாதானம் ெசய்யும் பொருட்டு.. என் மடியிலேயே ஆறுதல் படுத்தினேன்..
அவளது கண்களுக்கே வலிக்குமளவுக்கு அழுது இருந்தபடியே ..
உறங்க அதிகாலை ஆனது.. என் மடியிலே இருந்த அவளை எழுப்ப என் மனதும் இடம் தரவில்லை..

என் கண்களுக்கு விழித்தவாறே..
விடிந்தும் போனது...

7 நாட்கள் ரணமாக கரைய ..
ஏச்சுக்களும் பேச்சுக்களும் நான் இல்லாத தருணங்களில் என் உறவுகள் என்னவளை வதம் ெசய்ய ..

எனக்குள் அடக்கி ைவத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வரும் தருணமும் வந்தது...

எதார்த்தமாக நான் உள்ளே நுழைந்த சமயத்தில் என் தங்கையும் அண்ணியும் என் மனைவிைய வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க.. கண்களில் கண்ணீருடன் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள் என் மனைவி ..
எதையுமே கண்டுக்காதது போல என் அப்பா ஊஞ்சலில் ேபப்பர் படித்துக் கொண்டிருந்தார், ..

இதுவரை வராத கோ பங்கள் அனைத்தும் ஒன்று ேசர..
என் தங்கையை அருகே அழைத்தேன்...

"பளார்...." னு விழுந்த அறையில் பொறிகலங்கி 3 முறை சுற்றி சுவற்றில் மோதி கீழே விழுந்தாள்..
அவளிடம் இந்த 20 வருடங்களில் கண்டிப்பாய் கூட நான் பேசியதில்லை ..
என்னிடம் ெசல்லமாய் வளர்ந்த என் தங்கை வாங்கிய முதல் அரை ...

அப்பா பதறிய படி ஓடி வர.. அண்ணி பயத்தில் நடுங்க..

என் மனைவி என்னை தடுக்கும் ெபாருட்டு குறுக்கே வந்து நின்றாள்..

அம்மா வீட்டில் இல்லை என்பது உறுதியானது..

சத்தம் ேகட்டு ெவளியே இருந்த பெண்களும் உள்ளே ஓடி வந்தனர்...

"ச்சி.. நீங்கல்லாம் ெபாம்பளைகளே தானா..
அவளும் ஒரு சராசரி ெபான்னு தானே.. இதுவே உங்க கூட பொறந்த பொறப்பா இருந்தா இப்டிலாம் பேச மனசு வருமா ... ஏற்கனவே காயப்பட்டு வந்து நிக்கறவள எல்லாரும் சேர்ந்து அவ மனச குத்தி கிழிக்கிறிங்க.. " ஆட்காட்டி விரலை உயர்த்தினேன்.. "உங்க எல்லாருக்கும் அவ்ளோதான் மரியாதை... உங்களாலே அவ கண்ல இருந்து ஒரு ெசாட்டு கண்ணீர் வந்தாலும் .. எல்லாரையும் தூக்கி ெதாங்க விட்ருவேன் ஜாக்கிரதை...!"
ஆத்திரம் ரணகளமாக ..
"நா உன் தங்கச்சி டா .. நேத்து வந்தவளுக்காக என்னையே அடிச்சிட்ட ேல ...!"
"நா உன் ேமல எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்னு தெரியுமாடி உனக்கு .. என்னைய மாதிரியே நா இல்லாத சமயத்துல உன் அண்ணியா நினைக்கலனா கூட பரவாயில்ல.. அவள ஒரு மனுஷியா கூட நினைக்காத உன்னை.. என் தங்கச்சினு ெசால்ற யா ..
இதோ பாரு .. நீ என் தங்கச்சி அவ்ளோதான்.. அவ என்னோட உசுரு.. அவ மனசு கஷ்ட்டபடுத்துறது யாரா இருந்தாலும் என்னாலே மனன் னிக்க முடியாது.."

சண்டைகள் பெரிதாக .. அண்ணன் வந்து பிரிவினை உண்டாக்க ..
அப்பா வீட்டை விட்டு ெவளியே போக சொல்ல..
இறுதியாக அம்மா வந்து சேர்ந்தாள்..
வீட்டில் நடந்த களேபரங்களை அனைவரின் முகங்களை வைத்தே யூகித்து விட்டாள்..

கண்ணீருடன் என் முன்னால் வந்து நின்றாள்..
அம்மாவின் கண்களில் ஆயிரம் அர்த்தங்கள்..
புரிந்து கொண்டேன்..

வாடகை கார் வந்து நிற்க..
"நீ ேபாய் கார்ல உக்காரும் மா.. நா அம்மாகிட்ட பேசிட்டு வந்திடேறன்.."
"இல்ல மாமா .. நானும் உங்க கூட வே இருக்கேன்.. நீங்க ேபசுங்க .. ேசர்ந்தே ேபாயிரலாம்.." குரல் தழுதழத்தபடியே சொன்னாள்...
அம்மா விடம் திரும்பினேன்...
எனக்கும் களில் நீர் ேகார்த்தது..
" அம்மா ... இவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்த வஇல்ல.. எல்லாத்தையும் இழந்துட்டு வந்த வ ... எல்லாமே நான் தான்னு என்ன மட்டும் நம்பி வந்திருக்கா ... நீதானே சொல்லுவ.. உன்ன நம்பி வந்தவங்களுக்காக உயிரையே ெகாடுக்கலாம்னு.. உயிராவே வந்தவள மட்டும் எப்டி மா விட்டுக் கொடுக்கிறது..? நா உன் பையன் மா .. எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாற மாட்டேன்... " கனத்த பெருமூச்சுடன்.. "நா போறேன் மா .. நாங்க எங்க இருந்தாலும் .. எங்க நினைவு எல்லாமே உன்னை சுற்றியே இருக்கும்..!
யாருக்காகவும் ேபச முடியாமல் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் என் அன்னை...

ஊட்டி யில் ஒரு அழகான எஸ்டேட் கிராமத்தில் குடியேறினோம்..

நாட்கள் ெநாடிகளாகி பறக்க..

அவள் அழுகை மட்டும் ஓய்ந்தபாடில்லை, ..

கடுமையாக உழைத்தேன்..
15 வருடங்கள் உருண்டோடியது..
எனக்காய் என் மனைவியும் மாறினாள்..

ஆணின் தன்னம்பிக்கையே பெண் தான் என்பதை போல ஓவ்வொரு நிமிடமும் புரிய ைவத்தாள்..

வசதி வந்தது..
அழகான இரட்டை பெண் குழந்தைகள் அவளை உறித்து வைத்தாற் ேபாலவே...

நீலகிரி மாவட்டத்தில் ெபரிய எஸ்டேடக்கு அதிபதி ஆனேன்..

குடும்பம் அழகானது...

இன்று ..

"மாம்ஸ்..."துணி காய போட்டவாறே மனைவி அழைக்க..
"என்ன மேடம்.. ெராம்ப ஹேப்பி மூடுல இருக்கிங்க போல.."
"ம்ம்ம்ம்.. ஆமா.. இப்ப நீங்க என்ன ேகட்டாலும் கிடைக்கும்.. !"
"என்னாது, ...
என்னடி மளிகை கடைகாரன் சம்சாரம் ேகக் கற மாதிரி இருக்கு...! அது சரி.. ெபாண்ணுங்கலாம் எங்கடி.. இன்னும் ஸ்கூல் பஸ் வரலியா..?.."
" வந்துட்டாளுக மாமா .. Home Work பண்ணிட்டு இருக்காளுக..!"
சொல்லியபடியே ெநருக்கமாக வந்து ெநஞ்சில் சாய்ந்தபடியே ..
" மாமா.."
"என்ன மா"
"எனக்கு ஒரு பையன் ேவணும்..!"
"வரும் போது மளிகை கடைல வாங்கிட்டு வரட்டுமாடி தங்கம்..!"
"கிண்டல் பண்ணாதிங்க மாமா.. அப்டியே உங்கள மாதிரியே அம்மா மேலயும்.. பொண்ணுங்க மேலயும் பாசம் வச்சு .. ேநசத்தாலே எல்லாரையும் உருக வெக்கற மாதிரி.' உறிச்சு ெவச் சமாதிரி.. ப்ளீஸ்மாமா ..."
"அது சரி.. ெவ வரம் தெரி ற வயசுல ெபாண்ணுங்கள வச்சுக்கிட்டு .. ஏண்டி இப்டிலாம் பேசற ..!"
பட்டென விலகினாள்..
"ை நட் பெட்ரூம்க்கு வருவீங்கல்ல.. ம்ம்ம்ம்.. வாங்க.. உங்கள ேரப் பண்ணிடேறன்...!" என் கன்னத்தை கிள்ளியவாறே ெசால்லிவிட்டு திரும்ப .. " அடிப்பாவி..." அசந்து போய் நின்றேன்..

இருவரும் சிரித்தபடியே மாடியில் இருந்து கீழே இறங்க ..
உள்ளே ஒரே சிரிப்பு சத்தம்..
என் அம்மா வந்திருந்தார்கள்..

பார்த்தவுடன் எங்களுக்கு கண்ணீரே வார்த்தை களாக வர..
ஓடி வந்து அணைத்துக் ெகாண்டாள் இருவரையும் ..

இனிதாய் ெதாடங்கியது என் வாழ்க்கை பயணம்..!

குறிப்பு :
அம்மாவிடம் மகனாக இருக்கலாம்..
அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்..
தங்கை யிடம் அண்ணனாக இருக்கலாம்..
ஆனால்..
மனைவி யிடம் மட்டுமே எல்லாமுமாக இருக்க முடியும்..!

மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டுமல்ல..
மனதுக்கு பிடித்த குடும்பத்தினர் அனைவரின் மனதையும் ஆள்பவள்..!

ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து ..
பெண் என்பவள் குடும்பத்தின் தலையெழுத்து ..

மனைவியை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..

ஏனெனில் ..

குடும்பம் தான் அவள் காணும் அழகான உலகம்..