Sunday, August 19, 2018

Don't ever miss the opportunity to learn

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது.

ஒருநாள், பீஷ்மரிடம் வந்தவன், ”தாத்தா! வில் வித்தை கற்றுத் தரும் துரோணர், அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள்…” என்று வற்புறுத்தினான்.

வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர், தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார்.

உடனே துரோணர், ”பிதாமகரே! நாளைய தலைமுறை இடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை! அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்னதான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படிதானே நீர் நிரம்பும்! அதற்காக மழையை குற்றம் சாட்ட முடியாதுதானே?! எனினும் தாங்களே வந்து கேட்டதற்கு நன்றி” என்றவர், பீஷ்மரை நீராட அழைத்துச் சென்றார்.

துரோணரும் பீஷ்மரும் முன்னே நடக்க… பாண்டவர்களும் கௌரவர்களும் பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும், ”அர்ஜுனா! எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றிருக்கிறேன். ஆஸ்ரமம் சென்று எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்து வா!” என்றார் துரோணர். அர்ஜுனன் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான்.

இதையடுத்து அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் பெரிய ஆலமரம் ஒன்று! அதன் நிழலில் பீஷ்மருடன் சென்று அமர்ந்தார் துரோணர்.

”இன்று புதிய பாடத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறேன்” என்றவர், மந்திரம் ஒன்றை தரையில் எழுதினார்.

பிறகு, ”இந்த மந்திரத்தைச் சொல்லி, மரத்தின் மீது அம்பு எய்தினால், அந்த அம்பானது, மரத்தின் எல்லா இலைகளிலும் துளையிடும்!” என்றவர், துரியோதனனை அழைத்து இந்த வித்தையை செய்து காட்டுமாறு பணித்தார். துரியோதனன் எழுந்தான்; தரையில் இருந்த மந்திரத்தைப் படித்தான்; மரத்தை நோக்கி அம்பு தொடுத்தான்; மரத்தில் இருந்த எல்லா இலைகளிலும் துவாரம் விழுந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். துரியோதனன் கர்வத்துடன் வந்து அமர்ந்தான். பீஷ்மர் சந்தோஷப்பட்டார். இதையடுத்து, ”சரி… நீராடச் செல்வோம் வாருங்கள்” என்று கிளம்பினார் துரோணர்.

அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். அனைவரும் நதியில் நீராடினர். பிறகு அங்கிருந்து கிளம்பியவர்கள், மீண்டும் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர். அப்போது, நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம்… மரத்தின் எல்லா இலைகளிலும் இரண்டாவதாக துளை இருந்தது. பீஷ்மருக்கு குழப்பம்!

”துரோணரே, நீராடச் செல்லும்போது, துரியோதனன் அம்பெய்தி, மர இலைகளில் துளையை உண்டாக்கினான். நீராடிவிட்டு வந்தால்… எல்லா இலைகளிலும் இன்னொரு துளை இருக்கிறதே… எப்படி?” என்றார் வியப்புடன்.

உடனே மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர், ”இது யார் செய்த வேலை?” என்று கேட்டார்.

”அடியேன்!” என்று வணங்கி நின்றான் அர்ஜுனன்.

பீஷ்மர் திகைத்தார். அர்ஜுனனிடம், ”இந்த வித்தையை துரோணர் கற்றுக் கொடுக்கும்போது நீ இங்கு இல்லை. பிறகெப்படி…?” என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டார்.

”தாத்தா! எண்ணெய்ப் பாத்திரத்துடன் திரும்பும் போது, இந்த மரத்தடியில் காலடிச் சுவடுகள். தவிர, தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் கண்டேன். எதற்காக இந்த மந்திரம் என்று யோசித்த வேளையில், மரத்தின் இலைகளில் இருந்த துளையை கவனித்தேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று யூகித்தேன். மந்திரத்தை உச்சரித்து அஸ்திரம் தொடுத்தேன். என் யூகம் பொய்க்கவில்லை; எனது அஸ்திரம் எல்லா இலைகளையும் துளைத்தது!” என விவரித்தான் அர்ஜுனன்.

அவனைக் கட்டியணைத்துக் கொண்டார் பீஷ்மர். துரியோதனனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ‘ப்பூ… இதென்ன சாதனை?’ என்று கேலி செய்தான்.

இதைக் கண்ட துரோணர், ”துரியோதனா! எங்கே… மீண்டும் அம்பு எய்தி, இலைகளில் துளை உண்டாக்கு!” என்றார் சிரித்தபடி.

துரியோதனன், மந்திரம் எழுதியிருந்த இடத்துக்கு வந்தான். அங்கே… மந்திரம் இல்லை; அழிக்கப்பட்டிருந்தது. அதிர்ந்து போனான்.

”தரையில் எழுதப்பட்டிருக்கும் மந்திரத்தை எவரேனும் மிதித்துவிடக் கூடாதே என்று நான்தான் அழித்து விட்டேன்” – பவ்வியமாகச் சொன்னான் அர்ஜுனன்.

மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன். ”பீஷ்மரே! இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா?” என்று கேட்டார் துரோணர்.

பிறகு மாணவர்கள் பக்கம் திரும்பியவர், ”சீடர்களே! சிந்தனையை சிதறவிடக்கூடாது. ஆத்திரம், அவசரம், கோபம் முதலான தீய குணங்களுக்கு மனதில் இடம் தரவே கூடாது. எதிலும் அலட்சியம் கூடாது.கூர்ந்து கவனிக்க வேண்டும்.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது.

Monday, August 13, 2018

மாவிலை

வீட்டில் விழாவின் போது 'மாவிலை' கட்டுவது ஏன் :

👉 நம் வீட்டில் நடைபெறும் விழாக்களுக்கு சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அழைக்கின்றோம். அவ்விதம் அழைக்கும்போது அவர்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் இருப்பினும் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நம்முடைய இல்லத்தின் விழாவிற்கு வருகை தருகிறார்கள். அவ்விதம் வருபவர்களை நாம் வரக்கூடாது என்று தடுக்க இயலாது. ஆனால், அவர்கள் வருவதால் வரும் நோய் தொற்றுகளை தடுப்பது விருந்தினரை அழைத்த நம் கடமையாகும்.

👉 மேலும், விழாக்களின்போது விருந்தினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் அங்குள்ள காற்றில் அசுத்தமும் அதிகரிக்கும். இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்விதம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் 'மாவிலை" ஆகும்.

👉 மாவிலையில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள். பூஜையின் போது கலசங்களில் உள்ள நீருடன் மாவிலையும் சேர்த்து வைப்பார்கள். பூஜையானது நிறைவுப்பெற்ற உடன் கலசங்களில் உள்ள நீரை மாவிலையின் மூலம் அங்குள்ள பக்தர்களுக்கு தெளிப்பார்கள் மற்றும் சிலர் அந்நீரை அருந்துவார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் மாவிலையனது கலச நீரில் பிராண வாயுவின் அளவை அதிகப்படுத்துகிறது.

👉 மாவிலை தோரணமானது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை போக்கும் தன்மைக் கொண்டது.

👉 மாவிலை தோரணமானது வீட்டில் எதிர்மறை சக்திகள் நுழைவதை தடுக்கின்றது.

👉 மாவிலை தோரணமானது வீட்டினுள் வரும் காற்றினை சுத்திகரித்து அனுப்புவதால் வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியமானது மேம்படும்.

👉 மேலும், மாவிலை என்பது சிறந்த கிருமிநாசினி ஆகும். மாவிலையானது விழாக்கள் நடைபெறும் இடங்களில் உள்ள மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தை சீர் செய்கிறது.

👉 மேலும், மாவிலையானது விழாக்களில் வருகை தரும் மக்கள் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டது. காய்ந்த மாவிலையானாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

👉 இவ்வளவு வளமும், ஆரோக்கியமும் கொண்ட மாவிலை தோரணத்தை மறந்து கடைகளில் கிடைக்கும் அலங்காரத்திற்கு மட்டும் பயன்படும் மாவிலை தோரணங்களை கட்டுவதால் என்ன பயன்?

👉 ஆகவே, இனி வரும் நாட்களிலாவது பயனில்லாத செயற்கை அலங்காரத்தை விடுத்து நம் முன்னோர்களின் பாதையில் சென்று நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து இயற்கையுடன் இணைந்து வாழ வைப்போம்.

Sunday, August 12, 2018

Nermaiyaga sinthiyungal

ஒரு இளம் தம்பதிகள்...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்.....!!

வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து...!!

ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,

பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.....!!!

ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன....!!!

ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை.....!!!

இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.....!!!

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின.....!!

உடல் நடுங்கியது....!!!

இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்....!!

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன....!!

அப்போது,
மிகப் பெரிய சப்தம்...!!

திரும்பிப் பார்த்தார்கள்......!!

இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது ,

மலையிலிருந்து மிகப் 'பெரிய பாறை'
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் உயிருடன் தப்பவில்லை....!!

இவர்கள் இருவரைத் தவிர.....!!

பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்......!!!

குயிலோசை இல்லை......!!

மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன......!!

வனக்குரங்குகள் மலை உச்சிக்கு பயந்து தாவி ஓடின....!

இளம் தம்பதிகள்,

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்....!!!

இருவரும் சொல்லிக் கொண்டார்கள்...!!

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கவே கூடாது......!!

ஏன் அப்படிச் சொன்னார்கள்....?

ஊகிக்க முடிகிறதா...?

சவாலான கேள்வி...!

100% உங்கள் யூகம் தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது....!!

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து
இறங்கி இருக்காமல்
பயணித்திருந்தால்.......!!!
.
.
.
.

சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்....!!

பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் உயிருடன் தப்பி இருப்பார்கள்......!!!

தற்கொலை செய்து கொள்ள வந்த இளம் தம்பதிகள் உயிரோடு இருக்கிறார்கள்....!!!

வாழும் சிந்தனையுள்ளவர்கள் விபத்தில் பலியானார்கள்...!!

வாழ்வதும் , இறப்பதும் நம் கைகளில் இல்லை....!!!

முடிவை தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது....!!

எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...

நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

Good one

படித்ததும் பகிரவேண்டும் போல் தோண்றியதும் படித்ததும் கண்கலங்கியதும் ......😥

எனக்கு 77 வயது….! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது...
அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..!
இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்...!
இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்...!
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல…!
இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு
எண்ணிக்கொண்டு இருக்கிறேன் …
கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக!

போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள்
வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது!
முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது……..
இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால்
என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு
வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்!

கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும்……….!
இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்
எல்லோரும் வேலைக்கு போனபின்பு
என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை
துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்
என்னுடைய துணிகளை தனியாகத்தான்
போடவேண்டும் என்று சொல்லி
அவர்களின் ஆடையோடு கூட
ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்!

கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட
எதுவும் சொல்வதில்லை,
மருமகளும் சொல்லவிடுவதில்லை!
இன்னும் நான்கு நாட்கள்தானே என்று
ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு
வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்
கடைசி மருமகளின் வீட்டு போக
என்னுடைய உடைகளை நானே
ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன்!
கடைசி மகன் மற்றவர்களை போல்
கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை,
வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்
இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது!

நான் ஊருக்கு போகும்போதெல்லாம்
மருமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு
பஸ் ஸ்டேண்டு வருவாள்!
அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு
போவதில் அப்படி என்ன ஆனந்தமோ
எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது
என்று அவள் கேட்டுக்கொண்டே போக
நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை
பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும்
சொல்லாமல் நல்லதை மட்டுமே
சொல்லிக்கொண்டு போவேன்!
அவள் கெட்டிக்காரி என்பதால்
போகும் வழியில் எனக்கு பிடித்த
ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து
வேடிக்கை பார்க்கும்போது
கண்டுபிடித்து விடுவாள்!

வீட்டுக்கு போனதும் என்னுடைய
கட்டை பையை ஆராய்ச்சி செய்து
மருந்து மாத்திரைகளாவது சரியாக
வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று
தேடிப்பார்த்து திட்டுவாள்!
அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை
நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து
சிரித்துவிடுவாள்!
இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று
மீனாட்சியிடம் சண்டை போடக்கூட
அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால்
போய் சேர்ந்துவிட்டதில் நிறைய
வருத்தம் எனக்கு!

நான்கு நாட்கள் கழித்து
பஸ்ஸில் போய் இறங்கினேன்,
எப்போதும் போல் எனக்கு முன்வந்து
காத்திருந்தாள்!
ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,
ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார
வைத்துக்கொண்டாள்,
உங்களை ஷேவிங் பண்ண கூட
கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா
அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா
ஆயிட்டாங்களா எனும்போதே
அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....
என்று ஆரம்பிக்கும்போதே
இப்படியே பேசி பேசி அவங்களை
காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா
பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு
போவதற்குள் சவரக்கடைக்கு தான்
அழைத்து சென்றாள்!

கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள்,
பெயிலான மார்க் சீட்டை காட்டும்
குழந்தையை போல் தயங்கி தயங்கி
ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை
காட்டினேன்!
கோபத்தை வெளிக்காட்டாமல்
கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள்!
இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா....என்று முறைத்தாள் என்னிடம் பதிலில்லை!
ஊர் உலகத்துல யாரும் எதுவும்
சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு
கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை
கஷ்டப்படுத்தி அனுப்புறது..

இதேவேலையா போச்சி எல்லாருக்கும்
என்று முணுமுணுத்துக்கொண்டே
கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,
துணியெல்லாம் சுத்தமா
துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க
பொய் சொல்லாம சொல்லுங்க
என்று டீச்சரை போல் முறைக்க
என்ன செய்வது என்று தெரியாமல்
பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,
அவளும் சிரித்துவிட்டாள்!
எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி
பையை நிரப்பிக்கொண்டு
வீட்டுக்கு அழைத்து சென்றாள்!
ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது
லேசா மயக்கமா இருக்கு
சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்
கொஞ்சதூரம் தான்பா போயிடலாம்
பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல
மெதுவாக சாய்ந்துகொண்டேன்!
உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை,
நான் பெறாத மகளின் மீது
சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,
அதனால் தான் பொய்சொல்லி
சாய்ந்துகொண்டேன்!
இன்னும் ஒரு மாதத்திற்கு
அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில்
காணாமல் போகும் என் முதுமையின்
ஊமைக்காயங்கள்!🌴🌱❤️

Saturday, August 4, 2018

God is in Poor people smile

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,
"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.
அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.
திடுக்கிட்ட பண்ணையார்,
"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்
இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.
விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,
"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.
அவன் "ஆம்" என்றான்.
பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.
"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார்.
அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.
பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.
ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....
கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.
ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்......
கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.
ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...

அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களும் பார்க்கட்டும்.