Monday, June 18, 2018

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :
சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

Thursday, June 7, 2018

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம்  செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்கியம்  அனுபவியுங்கள்

Tuesday, June 5, 2018

கண் கலங்க வைத்த பதிவு!!!!!!!

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!
♥பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
♥பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
♥பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
♥பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
♥பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
♥இரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
♥ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. #ப்ளீஸ்_கால் அட்டண்ட் பண்ணு”)
♥மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.
பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.
ரொம்ப பிடிசிருந்தா கமண்ட் பண்ணுங்க
#Harim_S
❤