Thursday, June 29, 2017

மகனுக்கு கடிதம்

படித்த பிறகு மனம் நெகிழும் கதை, miss பண்ணிராதீங்க😍😍

இனிமே இப்படித்தான்...

இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள்.

நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா

ஏனாம்.... சரியாத்தான இருக்கு..

அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க மாட்டாங்களா..  இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.

ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..

சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..

போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய் திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.

சம் போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.

எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...?

சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..

நாளைக்கா ?

என்ன விசேஷம்... ?

போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...

சொல்லுடி என்ன பிரச்சினை..

ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...

சொல்லு என்ன பிரச்சினை...

ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...

சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே

ஒன்னும் வேணாம்...

நோ நோ.. இது சக்தி ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.

இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு. சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.

ஏன் அப்படி...

அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...

செமயா இருக்கு. நீ போட்ட பிளானா

நான் மட்டுமில்லை...  எல்லாரோட உழைப்புமிருக்கு...

அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.

சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.

நீ தான் சொல்லனும்

நான் என்ன சொல்ல...

ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்...

ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா

அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னடா ஏதும் பிரச்சினையா

அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்ன இது ..

ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.  அவள் படிக்க தொடங்கினாள்

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம்  உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும்  வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க  எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர  அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...  உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...  காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா  அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்  ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு  வாழ்க்கையா ?

செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு...  என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம்  கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.

- படித்ததில் பிடித்தது

Sunday, June 25, 2017

Difference between complete and finished

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,
ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".
அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".
அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

#இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே #இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்

#இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே #இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
10. முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
11.கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
12.நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
13. சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
14.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
15.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
16.வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
17. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
18. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
19. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
20. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
21. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
22. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
23. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
24. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
25. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின்
மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும்
குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக்
கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!

Wednesday, June 21, 2017

Dedicated to all parents

I loved this Awesome Msg:
One who loves till her eyes close, is a *Mother*.
One who loves without an expression in the eyes, is a *Father*.
____________________________
*Mother* - Introduces you to the world.
*Father* - Introduces the world to you.
___________________________
*Mother* : Gives you life
*Father*   : Gives you living
__________________________
*Mother* : Makes sure you are not starving.
*Father*  : Makes sure you know the value of starving
__________________________
*Mother* : Personifies Care
*Father*: Personifies Responsibility
__________________________
*Mother* : Protects you from a fall
*Father* : Teaches you to get up from a fall.
__________________________
*Mother* : Teaches you walking.
*Father* : Teaches you walk of life
__________________________
*Mother* : Teaches from her own experiences.
*Father* : Teaches you to learn from your own experiences.
__________________________
*Mother* :  Reflects Ideology
*Father* :  Reflects Reality
___________________________
*Mother's* love is known to you since birth.
*Father's* love is known when you become a Father.
__________________________
 Dedicated to all parents.

Tuesday, June 20, 2017

What is important !!!

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.
அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.
அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....
முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..
பகிர்வு

Friday, June 16, 2017

சில உளவியல் உண்மைகள்!

சில உளவியல் உண்மைகள்!
1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!
பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...!
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!
3 மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....
7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..
8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..
9. குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .
10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்.... நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ... உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..
3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்... எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....
5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....
7. அழும் போது தனியாக அழுங்கள்... நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....
படித்தேன்; பகிர்ந்தேன்

Thursday, June 15, 2017

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........
கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.
பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து அடுப்பையே அனைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
# புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
# எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.....
  படித்ததில் சிறந்தது 

Thursday, June 1, 2017

#தோசை

#தோசை.
நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்,ஜோதிடமும்...
தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.
அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)
இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே
தோசையை Clock vice சுட்டால் தான் வரும்,பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே
இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்
ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள்
ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில்
வழங்குகிறார்
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.
பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.
தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
( கல்லில் ) தோய்த்துச் செய்வது
என்னும் பொருளில்
தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,
மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு. 
#படித்தேன்_பகிர்ந்தேன்.

எனக்குத் தெரிந்து 80 -களில்

எனக்குத் தெரிந்து 80 -களில்
தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது....!
*
சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு, பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு, அக்கம், பக்கத்தவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.
*
குழந்தைகள் அனைவரும் ஓடி, ஆடி, விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
*
தெருவில் வேக வாய்த்த கடலை, கருப்பு உளுந்து, பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள்.
*
மெல்ல பொழுது சாயும் நேரத்தில், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன், அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள்.
*
வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட..! பாட்டிக்கள் மட்டும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.
*
வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது..!
*
ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேளையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புவார்கள்...! மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடு நடுவே சொல்வார்கள்...!
*
இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS, AM ராஜா, P.சுசீலா, PB Srinivas, SPB...... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும்...!
*
வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது...! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது.
*
அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்...!
*
அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம்.
*
உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும்.
*
வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்..!
*
அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம்.
*
காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார்.
*
நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றி சரி செய்வார்கள்...!
*
விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு...!
*
சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு...!
*
இன்றும், பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...!
*
பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள், நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன.
பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம்.
*
இதற்கு முன், கிராமபோன் இருந்தது. அதை சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள்...! இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும்.
*
பிறகு, கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில், மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது.
*
பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும், கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்...!
*
ஆர்வ மிகுதியால், உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு.