Saturday, November 18, 2017

Muligai food

#படித்தேன் #பகிர்ந்தேன்

*தோசை ₹10... மதிய உணவு ₹15... மூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்!*

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது.

மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின.

ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது.

அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது.

கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது.

எல்லாம் விலை ஐந்து ரூபாய் என்பது மற்றொரு ஆச்சர்யம்.

உள்ளே உணவகத்தினுள் சென்றால் சாப்பாடு, ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் எனப் பட்டியலும் மூலிகை மயமாக காட்சியளித்தது.

மதிய சாப்பாடு 15 ரூபாய்தான் என்பது இன்னும் ஆச்சர்யம்.

சென்னையில் குறைந்தது 50 ரூபாயாவது இருந்தால் மட்டுமே பசியாற முடியும் என்ற நிலை இருக்கும்போது இது சாத்தியமா என்ற எண்ணம் வரவே மூலிகை உணவகத்தின் பணம் வசூலிக்கும் மேலாளரிடம் விசாரித்தோம்.

அவர் "எங்க கடையோட ஓனர்கிட்ட கேளுங்க" என்று அவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தார்.

உணவகத்தின் முன்னதாக தேநீர் கடை, மூலிகைப்பொடி விற்கும் பிரிவு என அனைத்தும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது.

உணவகத்தின் உள்ளே வரிசை கட்டி காத்திருக்கின்றனர், மக்கள்.

அந்த அளவுக்கு கூட்டமாக இருந்தது. மறுபுறமோ பரபரப்பாக மக்கள் பசியாறி வெளியேறுகிறார்கள்.

மக்கள் கூட்டம் அலைமோதி களைக்கட்டுகிறது, மூலிகை உணவகம்.

உணவக உரிமையாளர் *சித்த மருத்துவர் வீரபாபு*வுடன் பேசினோம்.

"அனைத்து உணவு வகைகளும், இங்குத் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.

காலை உணவாகக் கருவேப்பிலை பொங்கல், ஆவாரம் பூ, துளசி, திணை அரிசி, சாமை அரிசி போன்ற இட்லி வகைகளும், தோசையில் முடக்கற்றான், தூதுவளை, கம்பு, கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, புதினா போன்ற தோசை வகைகளும் இங்குக் கிடைக்கும்.

இட்லி 5 ரூபாய்க்கும், தோசை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூலிகை உணவகத்தை ஆறு வருடங்களாக இந்த இடத்தில் நடத்தி வருகிறேன்.

ஆரம்பத்தில் என்ன விலை இருந்ததோ அதே விலைதான் இன்னும் நீடிக்கிறது.

எவ்வளவு பொருள்கள் விலையேறியபோதும் என் உணவகத்தில் உணவு 15 ரூபாய்தான்.

அதனால்தான் மாறாத அதே மக்கள் கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கிறது.

கூட்டம் அதிகம் இருந்தாலும் மக்கள் காத்திருந்து பசியாறுகிறார்கள்.

நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறையவில்லை.

இதுதவிர, பிரண்டை, தூதுவளை, கொள்ளு, புதினா போன்ற துவையல் வகைகளையும், மூலிகை சூப் மற்றும் ரச வகைகளையும் சாப்பாட்டுடன் தருகிறேன்.

தோசை வகைகளில் முடக்கத்தான் தோசை கொத்தமல்லி சட்னி, வாழைக்காய் கூட்டு, பாரம்பர்ய குழாய் புட்டு என வரிசையாக அடுக்கிக் கொண்டே சென்றார்.

மக்களின் உடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த உணவகத்தை விடாமல் நடத்தி வருகிறேன்.

நாம் உண்ணும் உணவுதான் மருதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது பெரும்பாலோனோர் உணவு என்ற பெயரில் விஷத்தைச் சாப்பிடுகின்றனர்.

இப்போது மக்களிடம் உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. இயற்கையால் இங்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை" என்றவர், தொடர்ந்தார்.

இங்கு இருக்கும் ஒவ்வொரு உணவிலும் ஏதோ ஒரு மூலிகை நிச்சயமாக இருக்கும். நம் நாட்டில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது சர்க்கரை நோயினால்தான்.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு சீரற்று இருப்பதுதான் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணம்.

கணையம் ஆரோக்கியத்துடன் செயல்பட ஆவாரம்பூ பயன்படுகிறது.

ஆவாரம்பூ இட்லி, ஆவாரம்பூ சாம்பார், ஆவாரம்பூ கொழுக்கட்டை என சர்க்கரையைக் கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இதுதவிர தூதுவளை, புதினா, துளசி மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி கொழுக்கட்டை, புட்டு, துவையல் மற்றும் மூலிகை சூப்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கையாக விளையும் இம்மூலிகைகளை, இன்றைய சந்ததியினருக்கு ஏற்றாற்போல உணவில் சேர்த்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.

பொதுவாக மூலிகைகள் என்றாலே பிடிக்காத சிறுவர்களுக்குக் கூட இம்மூலிகை உணவகம் கவர்ந்திருக்கிறது.

ஆனால், உணவே மருந்தாக இருந்த காலம் மாறி இப்போது, மருந்துதான் உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது" என்றார்.

அதன்படி அந்த உணவகத்தில் மூலிகை உணவினை ருசி பார்த்தேன்.

மூலிகை மணத்தில் உணவு நன்றாகவே இருந்தது.

வெறும் 15 ரூபாய்க்கு மூலிகை உணவு என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்ற ஆச்சர்யம் மட்டும் விலகவே இல்லை.

.
பாராட்டுக்கள் சித்த மருத்துவர் வீரபாபு அவர்களே.

Thursday, November 16, 2017

Paadam katrukal

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

படித்ததில் பிடித்தது.

Ethu nagarigam

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!
மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!
தந்தை:- இந்த போன் எங்ளோ மா..??
மகள்-: Rs-40,000 அப்பா..!!
தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??
மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!
தந்தை:- என்னது நாலாயிரமா..??
மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??
தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??
மகள்:- என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!
அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?
நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..
இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??
யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??
இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
என்று கூறினார் அப்பா..!!!
இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!!
சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??
நன்றி..!!! நா ஏதாவது தப்பா சொல்லி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க
இவன்:-#சோகையன்தோப்பு பசங்க.......

Tuesday, November 14, 2017

Good one

*நான் ரசித்த மிக அழகான பதிவு*..

அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்...

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது.

இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.

”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”

என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.

“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.

கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.

கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.

அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில்
எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறை யில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக
மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு.
“நமக்கு இங்கு வேலை
கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர் களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.

கலக்கத்துடனே
நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே

“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.

கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம்.

அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா
மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லா மல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.

நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
மகன்.

அப்பா நமக்காக எது செய்தாலும்
சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!

உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,
வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.

நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,

நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று,

அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.

தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.

ஒரு சொல் கவிதை அம்மா !

அதே ஒரு சொல்
சரித்திரம் அப்பா !!

தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.

தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.

நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.

தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.

அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.

எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை

பிடித்திருந்தால் பகிருங்கள்

Monday, November 6, 2017

Yaar avan

"நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா.

அவரை என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.

என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.

காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.
அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.

விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.

அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.

நாட்கள் விரைந்தது .
நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.

அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.

நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.

சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.

செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.
எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.

எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .

நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.

இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.

அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?

அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.

கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.
இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.

சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை நாங்கள் "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.

அவருடைய மனைவியின் பெயர் கம்ப்யூட்டர்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!!