Tuesday, May 31, 2016

Warren Buffet

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........

✔லைக் (Like) => தமிழ் செய்திகள்

Monday, May 30, 2016

Wonderful Analysis

Wonderful analysis 👇
ஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை.... என உணர்த்தியது
*பரமபதம்*

எண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது
*கிட்டிபுள்*

வெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிகொடுத்தது
*தாயம்*

அடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது
*ஏழுகல்*

வேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது
*சதுரங்கம்*

ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது
*ஐஸ்பால்*

சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது
*நொண்டி*

இருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும் குணம்... மனம் பதித்தது
*பல்லாங்குழி*

நண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது
*பச்சைகுதிரை*

அதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை ...😊

Love

One Women saw Three Saints in front of her house. And She was not knowing any of them.

Women said –
“Kindly come inside and have Food”

Saint replied –
"is Your Husband inside the House? ”

Women – “No, he has gone out”

Saint –“Will come inside the House only when he has come”

In the evening the Woman's Husband comes Home and she tells the complete story about the Saints.

Husband – “Go and tell them I have come Home and invite them inside the House.”

Woman went out and called the Saints inside the house.

Saint said –
“We all don't go inside anyone House together. ”

“But why?” – Woman asked

One of the Saint replied – “My Name is Wealth”

Then he pointed  to other Saints and said –
“These Two Saints Names are Prosperity and Love"

Only one of us can come inside your House!

"You go in and discuss with Your Family and decide which Saint You want to invite ”

Woman went inside and told all this to her Husband.

Her Husband became too Excited

And said –“If this is the matter then let us invite Wealth! Our House will be filled with Happiness”

Wife – “I feel We should invite Prosperity”

Their Daughter was in the next room,
She was listening to all this discussions.  She came close to them and said –
“I feel We should invite Love. Beside Love nothing is Important”

“You are  right, We should invite Love only” – Her Parents agreed.

Woman went out and asked Saints –
“Between You all who is Love please come inside the House”

Love started walking towards the House! 

Other Two Saints started following Love.

The surprised Woman asked the Saints –
“I only invited Love then why You Two are coming inside the House?”

One of the Saint replied – “If You had invited Prosperity or Wealth, then only that particular Saint would have entered Your House.

But You have invited Love!

Love never walks Alone,
Where ever Love is, there is always Prosperity and Wealth. They all go Hand in Hand.

Read this Story once, Twice or, Thrice

If You like it stay with Love,

Spread Love, Give Love and Take Love.

As Love is the only Secret to Success !!

Wednesday, May 25, 2016

Email

ஈமெயில்

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான்.

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி
கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன.

அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்
வாங்கினான்.

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது.

மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.

அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்
தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
-Vishali
---
சிரிப்புடன் சிந்தனைகள் தாங்கி விரியும் நம் பக்கம்
Laughter with good thought is the best social medicine
Comedy நகைச்சுவை

Varam

🔯ஒரு உண்மையான....
இறைபக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார்!!

அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்!!

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்
வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை.

அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன்.

இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை.

ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என வணங்கினர் அம்மையும் அப்பனும்!!

முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா?... வரணும் வரணும்…!! என்று வரவேற்றவர்,  தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்..!!

மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்!!

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும்!!

மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் 'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார், முனிவர்!

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார்.!!

முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்; கொடுக்கிறோம் எனச் சொல்ல..!! முனிவர் சிரித்தார்!!

வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம்!!

உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது
வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார்!!....?

நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும்!!;  அது போதும் என்றார்!

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே!!

இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார், முனிவர்!!

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டுச் சென்றனர்!

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு!!!

நீதி:
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு, "நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும்." என்பதே மனத்தெளிவு!

Wednesday, May 11, 2016

Parents

One day, I was so angry, that I left home, swearing not to return,  Parents, who can't even buy me a Bike, have no rights to dream to make me an Engineer. In my fit of anger, I didn't even realise that I was wearing my father's Shoes. I even stole his wallet, which had some papers, torn so that mom cldnt see

While, I was rushing on foot towards the bus stop, I felt some pain in my foot. I also felt dampness inside the shoe. That is when I realised the shoe had a hole underneath.

There were no buses around. Not knowing what to do, I started to look in my Dad's wallet. I found a loan receipt of Rs. 40,000, which he had taken from his office. A laptop bill (he had bought for me). To my utter shock, also found a letter from his manager asking him to wear neat looking shoes to the office. I remembered my mother pestering him to buy a pair of new shoes, but he would convince her that his shoes would last another six months atleast.

Also, found an old scooter to a new bike, Exchange offer letter in his wallet.

I instantly remembered, that when I left home, my Dad's scooter was not there.

I started feeling weak in my legs, and felt like weeping uncontrollably!. I ran back home with my foot paining, only to find my Dad nor the scooter there. I found him at the exchange offer place.

Looking at my Dad, my grief engulfed me. I hugged him tightly and started crying loudly, said "Dad I don't need the Bike".

That is when I realised, the pain, hardship our parents go through, and the unconditional love that they give us
They put our needs before theirs
Ridiculing parents when they are alive, and longing for them when they are not around, has no meaning..

Kindly tell this story to your children to help them  identify and develop human values in them.

Have a wonderful day🙏

Sunday, May 8, 2016

Kamarajar

எனக்கு நினைவுக்கு வருவது....
காமராசரின் ஆட்சி காலம்:

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கி தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்ற போது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலேயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..?

இல்லை "இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..?
இன்றைய ஆட்சியாளர்கள்
4.5 லட்சம் கோடி கடன்நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ????
அனைவருக்கும் பகிருங்கள் நன்றி...